200க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து சாம்பல்...! புத்தாண்டிலும் விடாத சோகம்

Report Print Abisha in அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவில் நீயூ சவுத் வேல்ஸ் காட்டுத்தீயில் 200க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து சாம்பலான தகவல் வெளியாகியுள்ளது.

அவுஸ்திரேலியாவில் நீயூ சவுத் வெல்ஸ் பகுதியில் காட்டுதீ பரவி வருகின்றது. அந்த காட்டில் பல்லாயிர கணக்கான சுற்றுலா பயணிகள் சிக்கியுள்ளனர்.

இந்நிலையில், அந்த காட்டின் அருகில் வசிக்கும் நீயூ சவுத் வேல்ஸ் மக்களில் 200க்கும் மேற்பட்ட வீடுகள் எரித்து சாம்பலானதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், East Gippsland பகுதியில் 43 வீடுகள் எரிந்த சாம்பலானதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.

அந்த காட்டை சுற்றியுள்ள சாலைகள் முடகப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள மக்கள் வெளியேற்ற மட்டும் வழிவிடப்பட்டுள்ளது.

புத்தாண்டு முன்கூட்டியே அவுஸ்திரேலியாவில் பிறந்த நிலையில், அங்கு 112 இடங்களில் காட்டு தீ சூறையாடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

BBC

சவுத் வேல்ஸ் அதிகரி ஒருவர் “தீயை அணைக்கவும், மக்களை காக்கவும் பணியாளர்கள் அதிகளவில் இருந்தாலும், சாலைகளும், பருவநிலையும் ஒத்துழைக்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் இந்த காட்த்தீயால், வெப்பம் மேலும், அதிகரித்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தீவிபத்தில் தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்ட மூன்றுபேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் 63வயது நபரும் அவரது 29 வயது மகனம் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். மேலும், நிறுத்தப்பட்ட கார் ஒன்றி ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

காயமடைந்தவர்கள் குறித்த விவரம் இன்னும் சரிவர குறிப்பிடவில்லை என்று நீயூ சவுத் வேல்ஸ் ஆணையர் Shane Fitzsimmons தெரிவித்துள்ளார்.

KURT CRNIC VIA REUTERS

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்