அவுஸ்திரேலிய பூர்வ குடிகளின் உடலில் திராவிட மரபணு... சிலிர்க்க வைக்கும் புதிய சான்றுகள்

Report Print Vijay Amburore in அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலிய பூர்வகுடிகள் உடலில் தென்னிந்தியாவை சேர்ந்த திராவிட மொழி பேசுபவர்களின் மரபணு இருப்பதாக புதிய சான்றுகள் தெரிவிக்கின்றன.

1000 ஆண்டுகளுக்கு முன்னரே இந்திய பயணிகள் குழு அவுஸ்திரேலியாவில் தரையிறங்கி இருந்ததாக மரபணு சான்றுகள் தெரிவிக்கின்றன.

சில ஆண்டுகளுக்கு முன்பு இந்திய ஆண்களில் காணப்படும் ஒய் குரோமோசோம்களுடன், அவுஸ்திரேலிய பழங்குடியின ஆண்களின் ஒய் குரோமோசோம்கள் ஒத்துபோயுள்ளது. ஆனால் இப்போது வரை, இதுபற்றிய சரியான விவரங்கள் தெளிவாக இல்லை.

இதன்மூலம் மேக்ஸ் பிளாங்க் இன்ஸ்டிடியூட் ஃபார் எவல்யூஷனரி ஆந்த்ரோபாலஜி நிறுவனத்தைச் சேர்ந்த இரினா புகாச் சமீபத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான வழக்கை தீர்த்து வைத்திருக்கலாம் எனப்படுகிறது.

ஒற்றை-நியூக்ளியோடைடு பல்லுருவ தோற்றம் மற்றும் அவற்றின் வடிவங்களைப் படிப்பதன் மூலம் 4,000 ஆண்டுகளுக்கு முன் முதற்கடற்படை தரையிறங்குவதற்கு முன்பாகவே, இந்திய சாகசக்காரர்கள் அவுஸ்திரேலியாவில் குடியேறினர் மற்றும் கலாச்சாரத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டனர் என டாக்டர் புகாச் வம்சாவளியைப் பற்றிய பல்வேறு வகைகளை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த ஆய்வில், ஒற்றை-நியூக்ளியோடைடு பல்லுருவ தோன்றங்களின் வடிவம் இந்திய மரபியலில் மட்டுமே காணப்படுகிறது, குறிப்பாக தென்னிந்தியாவிலிருந்து வரும் திராவிட மொழி பேசுபவர்கள்.

டாக்டர் புகாச் இது கிமு 2217 இல் இருக்கும் என்று மதிப்பிட்டுள்ளார். இந்த காலகட்டத்தில் தான் இந்திய நாகரிகம் உருவானது மற்றும் அவுஸ்திரேலிய கலாச்சாரம் மற்றும் வனவிலங்குகள் மறு சீரமைக்கப்பட்டிருக்கலாம் எனவும் கூறியுள்ளார்.

சிந்து சமவெளி நாகரிகம் (இந்தியா) கிமு 2600 முதல் கிமு 1900 வரை உருவானது. இந்த காலகட்டத்தில், சிந்து சமவெளி கடலோர படகுகளை உருவாக்கி, மத்திய கிழக்கு உள்ளிட்ட அண்டை நாடுகளுடன் வர்த்தகம் செய்தன. இந்த புதிய தொழில்நுட்பம் அவுஸ்திரேலியாவிற்கும் செல்ல பயன்படுத்தப்பட்டது.

தொழில்நுட்பம் மாற்றப்பட்டதற்கான சான்றுகள் இந்தியர்கள் அவுஸ்திரேலியாவுக்கு வந்ததாக கருதப்பட்ட காலத்துடன் ஒத்துப்போகின்றன. இந்தியர்கள் வந்த நேரத்தில் தான், அவுஸ்திரேலியாவில் உணவு சேகரிக்கப்பட்டு சமைக்கப்படும் முறை மாற்றப்பட்டது.

குறிப்பாக நச்சுத்தன்மை கொண்ட cycad-ஐ வறுத்து சாப்பிட்டு வந்த அவுஸ்திரேலிய பழங்குடியினர், நீர் மற்றும் நொதித்தல் வழியாக நச்சுகளை அகற்ற ஆரம்பித்தனர். இந்த முறையானது தென்னிந்தியாவின் கேரளாவில் காணப்படும் முறையாகும்.

இதேபோல அவுஸ்திரேலியாவில் குடியேறிய இந்தியரைக் குறிக்கும் கடைசி மிக முக்கியமான சான்றாக டிங்கோ எனப்படும் நாய் ஆகும்.

டிங்கோ எப்போதும் ஒரு புதிரானது. இது ஆஸ்திரேலியாவில் இருந்த டாஸ்மேனிய புலி வகையை அழித்துவிட்டது. இந்த டிங்கோ நாய்கள் அவுஸ்திரேலியாவில் தோன்றவில்லை என்றாலும் கூட, இந்தியாவில் காணப்படும் காட்டு நாய்களுடன் ஒரு குறிப்பிடத்தக்க ஒற்றுமையைக் கொண்டுள்ளது.

இதனால் தீவுக்கு முதல் இந்திய குடியேறியவர்களுடன் பயணம் செய்திருக்கலாம் என நம்பப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்