'வெப்பத்தை தாங்க முடியாமல் கடலில் குதித்துவிடலாம் போல் உள்ளது'.... இரத்த நிறத்தில் வானம்! கலங்கும் மக்கள்

Report Print Abisha in அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியா காட்டு தீயில் தப்பி மக்கள் கடற்கரைகளை நோக்கி படையெடத்துள்ளனர்.

நீயூ சவுத் வெல்ஸில் காட்டு தீ மோசமாக பரவியுள்ள நிலையில், வானம் இரத்தம் நிறத்தில் மாறியுள்ளது. இதனை அடுத்து அங்குள்ள மக்கள் வெளியேற்ற இராணுவ விமானங்கள் மற்றும் கப்பல்கள் அனுப்பி வைக்கப்படும் என்று அந்நாட்டு அரசு அறிவித்தது.

இதுவரை நீயூ சவுத் வேல்ஸில் காட்டுத் தீயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12ஆக அதிகரித்துள்ளது. மேலும், நான்கு பேர் காணாமல் போயுள்ளதாகவும் அதிகரிகள் தெரிவித்துள்ளனர்.

அப்பகுதியில் காற்று திசை மாறியதால் காட்டுத் தீ மிகவும் மோசமாக பரவியது என உள்ளூர் தீ அணைப்பு சேவை நிறுவனம் ஒன்று விவரித்துள்ளது.

இந்த தீ தொடர்ந்து பரவி வருவதால், நியூ வேல்ஸில் உள்ள பேட்ஸ்மேன் பேயில் இருந்து விக்டோரியாவரை அவுஸ்திரேலியாவின் இரண்டு மாநிலங்கள் முழுவதும் அவசர நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விக்டோரியா மாநிலத்தின் கடற்கரையோரம் உள்ள சுற்றுலா தளங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அங்கு கடற்கரையோரம் மற்றும் கப்பலில் தஞ்சம் அடைந்திருக்கும் மக்களுக்கு உணவு, குடிநீர் வசதி செய்து தரப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

கடல் நீர் வீடுகளுக்குள் வராமல் இருக்க தடுப்பு சுவர்கள் எழுப்பபட்டிருந்தாலும், தீயால் ஏற்பட்டுள்ள வெப்பத்தின் தாக்கத்தால் கடலில் குதித்துவிடாலம் போல் உள்ளது என்று டேவிட் என்ற நபர் தெரிவித்துள்ளார்.

பல்வேறு கட்டங்களை காட்டுத் தீ முழுமையாக அளித்தாலும், கடற்கரை பகுதிகளில் இன்னும் அது பரவவில்லை. அதனால், விக்டோரிய கடற்கரையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குவிந்துள்ளனர்.

அவுஸ்திரேலியாவில் வெப்ப நிலை அதிகரிக்க இந்திய பெருங்கடலில் ஏற்பட்ட கால நிலை மாற்றம் தான் காரணம் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். பருவநிலை மாற்றம்தான் இந்த காட்டுத் தீ பரவ முக்கிய காரணம் என்று அவர்கள் சுட்டிகாட்டியுள்ளனர்.

ABC

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்