அவுஸ்திரேலியா காட்டுத் தீ: நிர்வாண படங்களை விற்ற மொடல் அழகி - கிடைத்தது கோடிகள்

Report Print Abisha in அவுஸ்திரேலியா
188Shares

காலிஃபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த மொடல் அழகி கெய்லன் வார்ட் தனது நிர்வாண படங்களை விற்று $700,000 டொலர்கள் திரட்டியுள்ளார்.

அவுஸ்திரேலியாவில் காட்டுத் தீ தொடர்ந்து பரவி வருகின்றது. இதில் 20க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்லாயிர கணக்கான ஏக்கர் நிலங்கள் மற்றும் வன விலங்குகள் பலிகாடாகியுள்ளது.

இதற்கு நிவாரணங்கள் திரட்ட மொடல் அழகி கெய்லன் வார்ட் தனது நிர்வாண புகைப்படங்களை விற்க துணிந்தார்.

இதற்கு அவர் தனது சமூகவலைதள பக்கத்தில் தனது புகைப்படம் ஒன்றை பதிவிட்டார். மேலும், $10 (₹715) மேல் நிவாரணம் அளிக்கும் ஒவ்வொருவருக்கும் தன் ஆடை களைந்தப் புகைப்படத்தை அனுப்புவதாகப் பதிவு செய்திருந்தார்.

அந்த இரவு வரை $7000 (இலங்கை மதிப்பில் 1269192.40) ரூபாய்க்கும் மேல், அவர் நிவாரணத் தொகையை சேமித்துள்ளார்.

மறுநாள் காலை அவர் எழுந்து பார்த்தபோது, அந்த ட்வீட் வைரலாகிவிட்டது! அவருடைய இன்பாக்ஸ் முழுவதும் நிவாரணம் அளித்த ரசீதின் நகல்களாகக் குவிந்து இருந்தன.

உறக்கத்தில் இருந்தபோதே, அவர் அறியாமல் $100,000 (இலங்கை மதிப்பில் 18131320.00) வரை நிவாரணத் தொகை உயர்ந்திருந்ததைக் கண்டு நெகிழ்ந்துள்ளார். அவரின் ட்வீட் 77,000 முறை வரை ரீ-ட்வீட் செய்யப்பட்டிருந்தது.

தற்போதுவரை கெய்லன் வார்ட்க்கு $700,000 டொலர்கள் (இலங்கை மதிப்பில் 126919240.00)எட்டியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்