அவுஸ்திரேலியாவில் உருவாகியுள்ள காட்டுத் தீயின் புகை உலகம் முழுவதும் பரவும் என்று நாசா தெரிவித்துள்ளது.
அவுஸ்திரேலியாவில் பரவி வரும் காட்டுத் தீ சில இடங்களில், கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த தீயால் உருவான புகை, அவுஸ்திரேலியா நீயூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில், இரத்த நிறத்தில் வானத்தை மாற்ற செய்தது.
இந்நிலையில், புத்தாண்டு தினத்தன்று இந்த புகையானது தென் அமெரிக்கா உள்ளிட்ட பகுதிகளில் பரவியது என்றும், அதேபோல் ஜனவரி 8ஆம் திகதி உலகின் பல பகுதிகளில் இந்த புகை பரவி விட்டது என்றும் நாசா தெரிவித்துள்ளது.
மேலும், இந்த புகை குறைந்தது ஒரு முறையாவது உலகம் முழுவதும் சுற்றும் என்று அமெரிக்காவின் வின்வெளி ஆய்வு மையம் தெரிவிக்கின்றது.
இது குறித்து நிபுணர்கள் கூறுகையில், “நிச்சையம் காலநிலை மாற்றத்தை கொண்டு வரும்“ என்று குறிப்பிட்டுள்ளனர்.

ஆனால், நாசா தெரிவித்திருப்பதாவது ஆயிரம் கிலோ மீற்றர்கள் தூரத்திற்கு அதிகமாக புகைகள் பயணிக்க முடியும் என்ற குறிப்பிட்டுள்ளது.
இந்த புகையின் தன்மை குறித்து ஆய்வு செய்யும் நிறுவனம், இதனால் காலநிலை அதிக வெப்பம் அல்லது அதிக குளிருக்கு தள்ளலாம் என்று குறிப்பிட்டுள்ளது.
தற்போது அவுஸ்திரேலியாவின் சிட்னி, மெல்போர்ன், கேன்பெரா மற்றும் அடிலெய்ட் ஆகிய பகுதிகளில் ஆபத்தான காற்று சூழ்ந்துள்ளது.
A fleet of NASA satellites 🛰️ working together has been analyzing the aerosols and smoke from the massive fires burning in Australia.https://t.co/93geNvCBnU pic.twitter.com/ZedZ199lvJ
— NASA Goddard (@NASAGoddard) January 9, 2020
மெல்போர்ன் நகரில் இன்று பரவி உள்ள மோசமான காற்று பயத்தை உருவாக்கியுள்ளதாகவும், மக்கள் உடல்நிலையை பாதிக்கும் என்றும் அதிகாரிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
அவுஸ்திரேலியாவில் தற்போதும் 100க்கும் மேற்பட்ட இடங்களில் தீ எரிந்து கொண்டுள்ள நிலையில், காலநிலை உகந்ததாக உள்ளதால் தீயணைக்கும் பணிகள் விரைந்து நடைபெற்று வருவதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.