உடும்பைப் பிடித்த மலைப்பாம்பு: முதியோர் இல்லத்தின் முன் சிக்கிய அசாதாரண காட்சி!

Report Print Balamanuvelan in அவுஸ்திரேலியா

உடும்புப் பிடி என்றொரு சொல் வழக்கத்தில் உண்டு, அதாவது உடும்பு எதையாவது பிடித்தால் விடாதாம்.

அப்படிப்பட்ட உடும்பையே ஒரு மலைப்பாம்பு விழுங்கும் அசாதாரண காட்சி முதியோர் கிராமம் ஒன்றில் கிடைத்துள்ளது.

அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் உள்ள ஒரு முதியோர் கிராமத்தில் அமைந்துள்ள ஒரு வீட்டின் முன், கூரையிலிருந்து ஒரு மலைப்பாம்பு தொங்குவதையும், அதன் வாய்க்குள்ளிருந்து உடும்பின் பாதி உடல் தெரிவதையும் புகைப்படம் எடுத்துளனர் அங்குள்ள மக்கள்.

அவுஸ்திரேலியாவில், வன விலங்குகள் உணவும் தண்ணீரும் தேடி ஊருக்குள் நடமாடுவது அதிகரித்துள்ளது.

இந்த கார்ப்பெட் மலைப்பாம்பு வகை மலைப்பாம்புகள், வீடுகளின் கூரை மீது பதுங்கியிருந்து பூனை, புறா போன்றவற்றை பிடித்து உண்பதுண்டாம்.

அப்படி உணவு தேடி ஊருக்குள் வந்த உடும்பு ஒன்று, உணவுக்காக பதுங்கியிருந்த ஒரு மலைப்பாம்புக்கே உணவாகியுள்ளது.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers