காரோடு தீ மூட்டி தாயும் 3 குழந்தைகளும் படுகொலை! நாட்டையே உலுக்கிய சம்பவத்தில் திருப்பம்

Report Print Basu in அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவில் கார் தீப்பிடித்து எரிந்ததில் முன்னாள் ரக்பி வீரர் மற்றும் அவருடைய 3 குழந்தைகள் சம்பவயிடத்திலேயே பலியான சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகளின் தாயும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பிரிஸ்பேன் நகரில் உள்ள கேம்ப் ஹில் பகுதியிலே இச்சம்பவம் நடந்தது.

காருக்குள் இருந்து முன்னாள் ரக்பி வீரர் ரோவன் பாக்ஸ்டர் (42) மற்றும் லயானா (6), ஆலியா (4), மற்றும் ட்ரே (3) ஆகியோர் சடலமாக மீட்கப்பட்டனர். மனைவி ஹன்னா பாக்ஸ்டர் (31) மருத்துவமனயைில் உயிரிழந்தார்.

ரோவன் பாக்ஸ்டர், தன்னைத்தானே குத்தி தற்கொலை செய்வதற்கு முன்பு காருக்கு தீ வைத்ததாக பொலிசார் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. இருப்பினும், தம்பதிக்கு இடையே குடும்ப சண்டையை நிலவி வந்ததை பொலிசார் உறுதிப்படுத்தினர்.

கடந்த ஆண்டு கணவரை பிரிந்த ஹன்னா, குழந்தைகளுடன் கேம்ப் ஹில்லில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

குழந்தைகளும் அவர்களது தாயும் கொல்லப்பட்டதாகவும், பாக்ஸ்டரின் மரணம் குறித்து சந்தேகத்திற்கிடமான சூழ்நிலைகள் எதுவும் இல்லை என்று குயின்ஸ்லாந்து காவல்துறையினர் கூறினார்.

bbc

நாளுக்கு நாள் மனிதர்களிடையே கோப உணர்வு அதிகரித்து வருகிறது. குடும்பம் மற்றும் வீட்டு சண்டை ஐந்து பேரின் மரணத்திற்கு வழிவகுத்தது என்று இன்ஸ்பெக்டர் மார்க் தாம்சன் கூறினார்.

இச்சம்பவத்தை அடுத்து நாடு முழுவதும் குடும்ப சண்டைக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கொல்லப்பட்டவர்களுக்கு பலர் அஞ்சலி செலுத்திவருகின்றனர். அவுஸ்திரேலியாவில் #HannahBaxter என்ற ஹேஷ்டேக்கில் ட்விட்டரில் டிரெண்டாகி உள்ளது.

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து தொடர்ந்து கவலை கொண்டுள்ள நிலையில், மக்களிடையே பரவலான கோபமும் விரக்தியும் ஏற்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் கணவர் அல்லது முன்னாள் கணவரால் சராசரியாக வாரத்திற்கு ஒரு பெண் கொலை செய்யப்படுகிறார் என்று புள்ளிவிவர பணியகம் தெரிவித்துள்ளது.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...