விமானத்தில் கண்ட காட்சி... கொரோனாவில் இருந்து தப்புவதற்கு தம்பதியினர் செய்த செயலின் வீடியோ

Report Print Santhan in அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவில் பயணிகள் விமானத்தில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு அஞ்சி, உடல் முழுவதையும் பிளாஸ்டிக் பையால் சுற்றிக் கொண்டு வந்த பயணிகளின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் அடுத்தடுத்து உலகம் முழுவதிலும் இருக்கும் நாடுகளில் அடுத்தடுத்து பரவி வருகிறது.

அந்த வகையில் அவுஸ்திரேலியாவில் தற்போது 15 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவுஸ்திரேலியாவின் சிட்னியில் இருந்த் ஹாமில்டனுக்கு சென்ற பயணிகள் விமானம் ஒன்றி தம்பதியினர், கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்புவதற்கு தங்கள் உடல் முழுவதையும் பிளாஸ்டிக் கவரால் மூடிய படி விமானத்தில் இருக்கின்றனர்.

இதை அந்த விமானத்தில் பயணம் செய்த Alyssa என்பவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டுள்ளார். அதில் தன்னுடைய இருக்கைக்கு பின்னர் இருப்பவர்களின் நிலையை பாருங்கள், கொஞ்சம் பயமாக இருக்கிறது. இது கொரோனாவிற்கான ஹாஷ்டேக்கை பயன்படுத்தியுள்ளார்.

இந்த வீடியோ தற்போது வரை 47,000 பார்வையாளர்களை தாண்டி வேகமாக வைரலாகி வருகிறது.

இந்த காட்சி ஒரு விதமான பரிதாபத்தை ஏற்படுத்தினாலும் நெட்டிசன்கள் கலாய்த்துள்ளனர். கொரானா வருவதற்கு முன்னரே மூச்சுத் திணறி உயிரை விட்டால் என்ன செய்வது, பிளாஸ்டிக்கால் சுற்றிக் கொண்டாலும் விமானத்தில் மற்றவர்கள் சுவாசிக்கும் காற்றை தானே இவர்களும் சுவாசிக்கிறார்கள் என்று கமெண்ட்களை குறிப்பிட்டு வருகின்றனர்.

இதன் மூலம் கொரோனா மனிதர்களை என்ன பாடு படுத்துகிறது என்பதற்கு இதை விட சரியான சான்று கிடைக்காது சிலர் குறிப்பிட்டு வருகின்றனர்.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்