மூத்த மகனை மருத்துவமனை கொண்டு சென்ற கர்ப்பிணிப்பெண்... நடுங்க வைத்த இரண்டாவது மகனைக் குறித்த செய்தி!

Report Print Balamanuvelan in அவுஸ்திரேலியா

கீழே விழுந்து அடிபட்ட தனது மகனை அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடிய ஒரு கர்ப்பிணிப்பெண், அவரது இரண்டாவது மகன் மற்றொரு விபத்தில் பலியானான் என்ற செய்தி கேட்டு நடுநடுங்கிப்போனார்.

அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேனைச் சேர்ந்த Kellie Simpsonஇன் மூத்த மகன் Bailey Rainbird (15) கீழே விழுந்ததில், அவனது முகத்தில் அடிபட்டுவிட்டது.

அவனை அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடியிருக்கிறார் கர்ப்பிணியான Kellie.

அவனை மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு காத்திருந்த Kellieக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது.

அதில் வந்த செய்தியைக் கேட்டு ஆடிப்போனார் Kellie. அவரது இரண்டாவது மகன் Liam Rainbird (13), கார் விபத்து ஒன்றில் சிக்கி இறந்துகிடக்கிறான் என்ற செய்திதான் அது.

மருத்துவமனையில் இருக்கும் குழந்தையை யார் பார்ப்பது, இறந்த குழந்தைக்கான நடைமுறைகளை எப்படி செய்வது என திணறிப்போனார் Kellie.

Liam Rainbird (13)

எட்டு மாத கர்ப்பிணியான Kellieக்கு இன்னும் இரண்டு மாதங்களில் குழந்தை பிறக்க இருக்கும் நிலையில், பிரசவத்திற்கான செலவு ஒருபக்கம், அதற்கிடையில் Liamஇன் இறுதிச்சடங்கிற்கான செலவுகள் என திணறிப்போனார் Kellie.

Liamஇன் இறுதிச்சடங்கிற்கான செலவுகளுக்காக சமூக ஊடகங்களில் உதவி கோரப்பட்டுள்ளது.

எப்போது Liamஇன் இறுதிச்சடங்கை எப்போது நடத்துவது என்று கூட முடிவு செய்யாமல் திணறிப்போய் நிற்கிறது Kellie குடும்பம்.

விபத்து நடந்த பகுதி

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்