மீன் சாப்பிட்டதும் மூச்சடைத்து உயிரிழந்த புதுமாப்பிள்ளை!

Report Print Vijay Amburore in அவுஸ்திரேலியா
500Shares

புதிதாகத் திருமணமான ஒரு தந்தை தனது கர்ப்பிணி மனைவியுடன், மீன் சாப்பிட்டபோது மூச்சடைத்து உயிரிழந்துள்ளார்.

அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தை சேர்ந்த அலெக்சாண்டர் ஹால் (37) என்பவருக்கும் அவருடைய காதலி கசாண்ட்ரா ஹெரால்டுக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றுள்ளது.

இம்மாத ஆரம்பத்தில் அவர் தனது கர்ப்பிணி மனைவியுடன் தேனிலவுக்கு சென்றுள்ளார். இருவரும் உணவருந்தி கொண்டிருந்த போது, பாரமுண்டி வகை மீனை சாப்பிட்ட ஹால் திடீரென சுவாசிப்பதை நிறுத்திவிட்டு தரையில் சுருண்டு விழுந்துள்ளார்.

அடுத்த நொடியே அவருடைய உடல் நீல நிறமாக மாறுவதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவருடைய மனைவி, உடனடியாக ஆம்புலன்சிற்கு தகவல் கொடுத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து அவருடைய மனைவி கூறுகையில், ஹால் குழந்தைகளைப் பெறுவதில் மிகவும் உற்சாகமாக இருந்தார். அவர் சிறந்த அப்பாவாக இருக்கப் போகிறார் என்று நினைத்திருந்தேன்.

உணவகத்தில் அவருக்கு வியர்க்க தொடங்கியபோதே ஏதோ தவறு இருப்பதாக நான் உணர்ந்தேன். பிரேசில் முந்திரியால் அவருக்கு ஒவ்வாமை இருப்பதை ஏற்கனவே அறிந்திருந்தார்.

ஆனால் பாரமுண்டி வகை மீனால் ஒவ்வாமை இருப்பதை அவர் அறிந்திருக்கவில்லை. இறப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன் மீன் சுவையாக இருப்பதாக கூறினார் என வேதனை தெரிவித்துள்ளார்.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்