கொரோனா உச்சம்... மிக மோசமான நிலை: பேரிடர் பகுதியாக அறிவிக்கப்பட்ட முக்கிய மாகாணம்

Report Print Arbin Arbin in அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் கொரோனா பாதிப்பு மிக மோசமான நிலையில் உச்சம் பெற்றதை அடுத்து பேரிடர் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து கடுமையான ஊரடங்கு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அரசு அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.

குறித்த கட்டுப்பாடுகள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் நேரப்படி மாலை 6 மணி முதல் அமலுக்கு வரும் என்று விக்டோரிய பிரதமர் டேனியல் ஆண்ட்ரூஸ் கூறியுள்ளார்.

புதிய கட்டுப்பாடுகளின் அடிப்படையில் தலைநகர் மெல்போர்னில் இரவு நேர ஊரடங்கு அமுலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

மேலும், குடியிருப்பை விட்டு வெளியேற வேண்டாம் என்ற உத்தரவானது மேம்படுத்தப்படும் எனவும், வீட்டை விட்டு வெளியேறுவதற்கு குடியிருப்பாளர்களுக்கு குறைந்த விலக்குகளை அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

குடியிருப்பாளர்கள் தங்கள் வீட்டிலிருந்து 5 கி.மீ (3.1 மைல்) க்கு மேல் பயணிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்,

உடற்பயிற்சி ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே என கட்டுப்படுத்தப்படும், மேலும் ஒரு நபர் ஒரு நேரத்தில் அத்தியாவசிய பொருட்களுக்காக ஷாப்பிங் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்துவதில் ஆரம்பகால வெற்றியின் பின்னர், அவுஸ்திரேலியாவில் எஞ்சிய பல நாடுகளை விட குறைவான நோயாளிகளே உள்ளனர்.

ஆனால் விக்டோரியா மாகாணத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகின்றன,

சமீபத்திய வாரங்களில் அவுஸ்திரேலியாவின் பல புதிய தொற்றுநோய்களுக்கு இது காரணமா அமைந்தது என கூறப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமை, மாகாணத்தில் 671 புதிய கொரோனா வைரஸ் பாதிப்புகள் மற்றும் ஏழு இறப்புகள் பதிவாகியுள்ளன.

இதனையடுத்து மாகாணத்தில் மொத்தம் 11,557 நோய்த்தொற்றுகள் மற்றும் 123 இறப்புகள் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்