உன் குழந்தையை கொன்றுவிடுவேன்... மிரட்டல் விடுத்த இளம்பெண்: பின்னணி!

Report Print Balamanuvelan in அவுஸ்திரேலியா

தனக்கு வேலை பறிபோனதற்கு காரணம் தன சக ஊழியராகிய பெண் என கருதிய இளம்பெண் செய்த மோசமான செயலுக்காக நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டார்.

ஆடம்பர உடையகம் ஒன்றில் பணிபுரிந்து வந்த அவுஸ்திரேலியரான Jessika Jane Drury(22)க்கு திடீரென வேலை போக, அதற்கு காரணம் தன் சக ஊழியரான பெண்தான் என நம்பினார் அவர்.

கோபத்தில் அந்த பெண்ணுக்கு குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார் Jessika. அந்த செய்தியில், ஒழுங்காக இரு, உன்னை மண்ணுக்குள் போட்டு புதைத்துவிட்டு, உன் குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்துக் கொன்றுவிடுவேன் என்று கூறப்பட்டிருந்திருக்கிறது.

உடனே சம்பந்தப்பட்ட பெண் பொலிசாரிடம் புகாரளித்துள்ளார்.

Jessikaவை கைது செய்த பொலிசார், அவரை நீதிமன்றத்தின் முன் ஆஜர் செய்துள்ளனர். அப்போது, தான் வேலை போனதால் கடும் மன அழுத்தத்திற்குள்ளாகியிருந்ததாக தெரிவித்தார் Jessika.

அத்துடன் அவரது சட்டத்தரணியும், அது வெறும் ஒரு மிரட்டல்தான், அவர் வேலை போன கோபத்தில் அப்படி செய்துவிட்டார் என்றாலும், அவர் சொன்னது போல் செய்யும் நோக்கமெல்லாம் Jessikaவுக்கு இல்லை என்று வாதாடினார்.

இன்னொரு முறை இப்படி ஏதாவது செய்தால் கடும் விளைவுகளை சந்திக்கவேண்டியிருக்கும் என எச்சரித்த நீதிபதி, Jessika 12 மாதங்களுக்கு ஒழுங்காக நடந்துகொள்கிறாரா என கண்காணிக்க உத்தரவிட்டுள்ளார். அதனால் சிறை செல்வதிலிருந்து தப்பியுள்ளார் Jessika.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்