நாட்டில் உள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்! பிரதமர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு: மகிழ்ச்சியில் மக்கள்

Report Print Santhan in அவுஸ்திரேலியா
618Shares

அவுஸ்திரேலியாவில், மக்களுக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்று அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவில் தற்போது வரை கொரோனாவால் 23,993 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்/ 493 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதுமட்டுமின்றி,15,246 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். இருப்பினும் கடந்த 24 மணி நேரத்தில், நாட்டில் புதிதாக 220 பேருக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டது. 12 பேர் பலியாகியுள்ளனர்.

இதனால் இந்த வைரஸ் பரவலை தடுப்பதற்காக அவுஸ்திரேலியாவும் தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பதில் தீவிரம் காட்டி வருகிறது.

ஆக்ஸ்போர்டு பல்கலையுடன் இணைந்து கொரோனா தடுப்பூசி மருந்து கண்டுபிடித்துள்ள அஸ்ட்ராஜெனக்கா நிறுவனத்துடன் அவுஸ்திரேலியா அரசு ஓர் ஒப்பந்தம் செய்துள்ளது.

தடுப்பு மருந்து பரிசோதனைகள் வெற்றிகரமாக முடிந்தவுடன், அதை உள்நாட்டில் தயாரித்து நாட்டில் உள்ள 2.5 கோடி மக்களுக்கும் இலவசமாக போடப்படும் என பிரதமர் ஸ்காட் மோரிசன் பிபிசி நிறுவனத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்