அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்த இந்திய தம்பதி... கைவிட்ட வேலை: சமயோகிதத்தால் ஈட்டும் வருவாய்

Report Print Balamanuvelan in அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்த ஒரு இந்திய தம்பதிக்கு கொரோனா ஊரடங்கால் பிழைப்பு நடத்த கடும் சிக்கல் ஏற்பட்டது.

ஆனால், புத்திசாலித்தனமாக டிக்டாக் மற்றும் யூடியூபில் வீடியோக்களை வெளியிட்டு பிழைப்பு நடத்தி வருகின்றனர்.

மெல்போர்னுக்கு குடிபெயர்ந்த இந்தர், குர்கிரத் தம்பதி, தங்கள் வேலை நேரம் போக மீதமுள்ள நேரத்தில் சமூக ஊடகத்தில் வீடியோக்களை வெளியிட்டு உபரி வருவாய் பார்த்து வந்தனர்.

பின்னர் தனது உபேர் சாரதி வேலை கைவிட, இந்த வீடியோக்கள் கைகொடுத்தது. தம்பதி பேஷன், சமையல், உறவுமுறைகள் மற்றும் கலாச்சாரம் முதல் சர்வதேச மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் வரை அலசி ஆராய்ந்து சமூக ஊடகங்களில் கலக்கி வருகிறார்கள்.

இப்போது அந்த வீடியோக்களிலிருந்து வரும் வருவாய்தான் குடும்பத்தினரின் முக்கிய வருவாயாகிவிட்டது. தம்பதியை 125,000 பேர் பின் தொடர்கிறார்கள்.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்