அவுஸ்திரேலியாவில் படுகொலைக்கு என்ன தண்டனை? இணையத்தில் தேடிவிட்டு வெளிநாட்டு இளைஞரின் கொடுஞ்செயல்

Report Print Arbin Arbin in அவுஸ்திரேலியா
12724Shares

அவுஸ்திரேலியாவில் படுகொலைக்கு என்ன தண்டனை என இணையத்தில் தேடிவிட்டு சீனத்து இளைஞர் ஒருவர் தம்முடன் தங்கியிருந்த இளம்பெண்ணை படுகொலை செய்துள்ளார்.

இந்த வழக்கில் தொடர்புடைய சீனத்து இளைஞருக்கு பிணையில் வெளிவராதபடி 13 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2018 ஜூன் மாதம் அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் 28 வயதான குய் "கேத்தி" யூ என்பவரை ஷூ டோங் என்ற சக சீனத்து இளைஞர் கொலை செய்தார்.

குய் யூவை கொலை செய்யும் முன்னர் டோங் பலமுறை இணையத்தில் தண்டனை குறித்தும், கொலை தொடர்பிலும் தீவிரமாக தேடியுள்ளார்.

மட்டுமின்றி கொலைக்கு பின்னர் குய் யூ உடலை மறைவு செய்யவும் இணையத்தில் தகவல் திரட்டியுள்ளார்.

இதனால், பொலிசாருக்கு இந்த வழக்கு தொடர்பில் துரித நடவடிக்கை முன்னெடுக்க உதவியாக அமைந்தது.

இந்த கொலை வழக்கில் டோங்குக்கு 18 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதுடன், 13 ஆண்டுகள் பிணையில் வெளிவர முடியாதபடி தீர்ப்பளித்துள்ளனர்.

ஆனால் இந்த தீர்ப்பை குய் யூவின் பெற்றோர் ஏற்க மறுத்ததுடன், இது வெறும் 13 ஆண்டுகள் தண்டனையே என முறையிட்டுள்ளனர்.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்