மூன்று வயது குழந்தையுடன் மாயமான நபரை வலை வீசி தேடும் பொலிசார்: அதிக ஆபத்து என அறிவிப்பு!

Report Print Balamanuvelan in அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவில், அதிக ஆபத்து என அறிவித்து மூன்று வயது குழந்தையுடன் மாயமான 33 வயது ஆணை பொலிசார் வலைவீசித் தேடிவருகிறார்கள்.

மேலும் சம்பந்தப்பட்டவர்களுக்கு உடல் நல பாதிப்பு வேறு இருப்பதால் குடும்பத்தினரும் பொலிசாரும் கவலையடைந்துள்ளனர்.

Beenleigh என்ற இடத்திலுள்ள வீடு ஒன்றிலிருந்து வெளியேறிய இருவரும், நடந்தே சென்று மாயமாகிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் யாராவது இந்த இருவரையும் கண்டால் உடனடியாக குயின்ஸ்லாந்து பொலிசாருக்கு தகவலளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.

அவர்கள் பெயர், அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் அறிமுகமானவர்களா என்பது குறித்த விடயங்கள் வெளியிடப்படவில்லை.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்