தன்னை விட 8 வயது குறைவான காதலனுடன் ஜாலியாக ஊர் சுற்றிய இளம் தாய்! காருக்குள் பரிதாபமாக துடி துடித்து இறந்த குழந்தை

Report Print Raju Raju in அவுஸ்திரேலியா
610Shares

அவுஸ்திரேலியாவில் தனது 3 வயது குழந்தையை காருக்குள் விட்டு காதலனுடன் ஊர் சுற்ற இளம்தாயார் சென்ற நிலையில் குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

Laura Peverill (37) என்ற பெண்ணுக்கு 3 வயதில் Rylee Black என்ற பெண் குழந்தை இருந்தது.

இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை தனது குழந்தையை காருக்குள் விட்டு அதை பூட்டியுள்ளார் Laura.

பின்னர் தன்னை விட 8 வயது குறைவான காதலன் Aaron Hill (29) உடன் வெளியில் ஜாலியாக சென்றிருக்கிறார் Laura .

கிட்டத்தட்ட நாள் முழுவதும் வெப்பமான சூழலில் காருக்குள் கிடந்த Rylee துடி துடித்து உயிரிழந்திருக்கிறாள்.

இதையடுத்து பொலிசார் காரை திறந்து குழந்தையின் சடலத்தை மீட்டனர். மேலும் Laura மற்றும் Aaron மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்