காதலியின் மொபைலில் வேறு ஒரு நபரின் குறுஞ்செய்திகளைக் கண்ட காதலன் செய்த மோசமான செயல்

Report Print Balamanuvelan in அவுஸ்திரேலியா
289Shares

அவுஸ்திரேலியாவில், மருத்துவக்கல்லூரியின் தன்னுடன் படித்த பெண்ணை காதலித்தார் மருத்துவர் ஒருவர். அவரது பெயர் Thomas Lang. ஆனால் 1980களில் Thomasஐ கைகழுவிவிட்டார் அவரது காதலியான Maureen Boyce.

கடும் ஏமாற்றம் அடைந்த Thomas, Maureenஇன் பிரிவைத் தாங்க இயலாமல், Maureenஐப் போலவே இருக்கும் ஒரு பெண்ணைத் தேடி அலைந்திருக்கிறார்.

ஆனால், அப்படி ஒரு பெண் கிடைக்கவில்லை... அதற்கு பதில் Maureenஐயே மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்க, மீண்டும் 2013 முதல் சேர்ந்து வாழத் தொடங்கியிருக்கிறார்கள் இருவரும். ஆனால், அப்போது Maureenக்கு திருமணமாகியிருந்திருகிறது.

அதைப்பற்றிக்கூட கவலைப் படாமல் Maureenஉடன் கண்ணை மறைத்த காதலுடன் வாழ்ந்து அந்த Thomas, 2015ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், ஒரு நாள் Maureenஇன் மொபைலுக்கு வந்திருந்த குறுஞ்செய்திகளை கவனித்துள்ளார்.

Image: Maureen Boyce/Facebook

அவற்றை வேறு ஒரு ஆண் அனுப்பியிருந்திருக்கிறார். அந்த செய்திகளைக் கண்டதும், இரண்டாவது முறையும் Maureen தனக்கு துரோகம் செய்து விடுவார் என்று அஞ்சிய Thomas, சமையலறையிலிருந்து ஒரு கத்தியை எடுத்துவந்து தூங்கிக்கொண்டிருந்த Maureenஇன் வயிற்றைக் குத்திக்கிழித்து அவரைக் கொலை செய்துள்ளார்.

பொலிசாருக்கு போன் செய்த Thomas, Maureen தன்னைத்தான் கத்தியால்குத்தி தற்கொலை செய்ததாக தெரிவித்துள்ளார்.

ஆனால், தீவிர விசாரணைக்குப்பின் Thomasதான் Maureenஐக் கொலை செய்துள்ளார் என்பதை அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளதாக கூறிய நீதிபதி, அவருக்கு ஆயுள் தண்டனை அளித்து தீர்ப்பளித்துள்ளார்.

Image: © Zac Boyce / Facebook

Image: © A Current Affair)

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்