பொடுகு தொல்லையா? இதோ வேப்பம்பூ

Report Print Deepthi Deepthi in அழகு
பொடுகு தொல்லையா? இதோ வேப்பம்பூ

தலை அழுக்காக இருந்தாலோ அல்லது அளவுக்கு அதிகமாகபேன் தொல்லைகள் இருந்தாலோ பொடுகு ஏற்பட வாய்ப்புள்ளது.

இதனால், தலையில் இருந்து வெள்ளை வெள்ளையா பொடுகு உதிர்ந்து கொண்டே இருக்கும், பின்னர் நாளடைவில் தலையில் புண்கள்ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே இயற்கை வழியில் பொடுகினை விரட்டலாம்.

காய்ந்த வேப்பம்பூவில் [உப்பு கலக்காத வேப்பம்பூ] 50 கிராம் - அதை 100 கிராம் தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு காய்ச்ச வேண்டும்.

இளம் சூடு பதத்திற்கு ஆறியதும், வேப்பம் பூவுடன் சேர்த்து எண்ணெயை தலையில் நன்றாகத் தேய்த்து அரை மணிநேரம் ஊறிக் குளித்தால், பொடுகு பிரச்னை தீரும்.

அதிகம் பொடுகு உள்ளவர்கள், வாரத்திற்கு ஒரு முறையோ, இரண்டு முறையோ, மூன்று வாரங்கள் குளித்தால் பொடுகு சுத்தமாக நீங்கி விடும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments