வீட்டிலேயே பிளீச் பேக் செய்யலாம்! எப்படி தெரியுமா?

Report Print Jubilee Jubilee in அழகு

முகப் பொலிவை பெற பலரும் பார்லர்களில் சென்று பிளீச் செய்வர். ஆனால் எப்போதும் இயற்கை முறையை பயன்படுத்துவது நல்ல பலனை தரும்.

வீட்டிலே இயற்கை முறையில் பிளீச் பேக்கை செய்து பக்க விளைகள் ஏதுமின்றி முகத்தில் உள்ள கருமையை நீங்க முடியும்.

செய்முறை

  • எலுமிச்சை சாற்றில் சிறிது கிளிசரின் அல்லது தயிர் மற்றும் தேன் கலந்து முகத்தில் தடவுங்கள். 20 நிமிடங்களில் முகத்தை கழுவுங்கள். இப்போதும் முகம் பொலிவாக இருக்கும்.
  • வெள்ளரிக்காயை சாறு எடுத்து அதனுடன் கற்றாழை ஜெல்லை கலந்து முகத்திலும் கழுத்திலும் தடவுங்கள். இப்படி செய்து வந்தால் முகத்தில் உடனடியாக கருமை மறையும்.
  • தக்காளியை விதையில்லாமல் அரைத்துக் கொள்ளுங்கள். அதனுடன் சிறிது தயிர் கலந்து முகத்தில் போடவும். 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவுங்கள்.
  • உருளைக் கிழங்கின் தோலை சீவிக் கொள்ளுங்கள். அதனுடன் சிறிது ரோஸ் வாட்டர் கலந்து பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ளவும். வறண்ட சருமத்திற்கு தேனும், எண்ணெய் சருமத்திற்கு எலுமிச்சை சாறும் பயன்படுத்தவும். இதனை முகத்தில் போட்டு 20 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள். முகம் பொலிவு பெறுவதை பார்க்கலாம்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments