பற்கள் வெண்மையாக பிரகாசிக்க வெறும் இரண்டு நிமிடம் போதுமே!

Report Print Printha in அழகு

ஒருவர் சிரிக்கும் போது அவர்களின் அழகை வெளிப்படுத்துவது, அவர்களுடைய வெண்மையான பற்கள் தான்.

அப்படி இருக்கும் போது, அந்த பற்களில் மஞ்சள் கறைகள் இல்லாமல் என்றும் வெண்மையாக பிரகாசிக்க இயற்கையான வழிகள் உள்ளதே!

பற்களின் மஞ்சள் கறையை போக்குவது எப்படி?

  • 1 டேபிள்ஸ்பூன் பேக்கிங் சோடாவை எலுமிச்சை சாற்றில் கலந்து, அதை பேஸ்ட் போல செய்து பற்களை நன்றாக துலக்கலாம் அல்லது அதை கொண்டு தினமும் வாய் கொப்பளித்து வந்தாலும் நல்ல பலன் கிடைக்கும்.

  • 3 ஸ்ட்ராபெர்ரி பழங்கள், 1/2 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடா மற்றும் சிறிதளவு உப்பு ஆகியவற்றை ஒன்றாக கலந்து, பேஸ்ட் போல செய்து, அதை பற்களில் விரல்கள் மூலம் நன்றாக தேய்த்து கழுவ வேண்டும்.

  • எலுமிச்சை பழத்தின் தோல்கள் மீது உப்பை தடவிம் அதை பற்களின் மீது நன்றாக தேய்த்து வரலாம் அல்லது எலுமிச்சை சாற்றில் உப்பைக் கலந்து அதை கொண்டு தினமும் கொப்பளித்து வந்தாலும் நல்ல பலன் கிடைக்கும்.

  • வாழைப்பழத்தின் தோலில் மக்னீசியம் அதிகமாக உள்ளது. எனவே இதை கொண்டு நமது பற்களில் தேய்த்து விட்டு, பின் பற்களை துலக்கினால் பற்களின் மஞ்சள் கறைகள் நீங்கிவிடும்.

  • துளசி இலைகள் மற்றும் ஆரஞ்சு தோலின் பவுடரை சம அளவில் கலந்து, அந்த பேஸ்ட்டை நமது பற்களில் நன்றாக தேய்த்து, 10 நிமிடம் கழித்து தண்ணீரில் கழுவ வேண்டும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments