இதில் 1 டேபிள் ஸ்பூன்: பற்களின் மஞ்சள் கறையை போக்கிவிடும்

Report Print Printha in அழகு

பற்களை இரண்டு வேளைகள் துலக்கினாலும் கூட பற்களின் இடுக்குகள் மற்றும் அதன் பின்புறத்தில் மஞ்சள் நிறக் கறைகள் சேர்வதை மட்டும் தடுக்க முடியாமல் தவிப்போர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளது.

ஆனால் இயற்கையில் பற்களின் மஞ்சள் கறைகள் மற்றும் அதனால் ஏற்படும் வாய் துர்நாற்றத்தை எளிமையாக போக்க அருமையான வழி இதோ.

பற்களின் மஞ்சள் கறையை போக்க என்ன செய்ய வேண்டும்?
  • 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயை வாயில் ஊற்றி தினமும் காலையில் 15-20 நிமிடம் கொப்பளித்து, வெறும் டூத் பிரஷ் கொண்டு பற்களை சிறிது நேரம் தேய்த்து, பின் டூத் பேஸ்ட் கொண்டு பற்களைத் துலக்க வேண்டும்.
  • ஒரு கையளவு எள் விதைகளை வாயில் போட்டு சிறிது நேரம் மென்று, துப்பிய பின் வெறும் பிரஷ் கொண்டு பற்களை நன்கு துலக்க வேண்டும்.
  • தக்காளியில் ஒரு துண்டை நறுக்கி, அதை பற்களில் தேய்த்து, 5 நிமிடம் ஊற வைத்து, பின் வெறும் டூத் பிரஷ் கொண்டு தேய்த்து கழுவ வேண்டும்.
  • 1 கப் நீரில் 1 டீஸ்பூன் கற்றாழை ஜெல், 1/2 கப் பேக்கிங் சோடா, 10 துளிகள் எலுமிச்சை சாறு மற்றும் கிளிசரின் சேர்த்து கலந்து, அந்த கலவையைக் கொண்டு தினமும் பற்களைத் துலக்க வேண்டும்.
  • தினமும் 3-4 அத்திப்பழங்களை வாயில் போட்டு மெல்ல வேண்டும். அதனால், வாயில் தூண்டப்படும் உமிழ்நீர் சுரப்பிகள் பாக்டீரியாக்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்தப்படுத்தி, பற்களை சுத்தமாக்கும்.
  • 2 டேபிள் ஸ்பூன் வினிகரில், 1 டீஸ்பூன் உப்பு மற்றும் 1/2 கப் நீர் சேர்த்து கலந்து, அதை கொண்டு தினமும் வாயை நன்கு கொப்பளித்து வர வேண்டும்.
  • ஈரமான டூத் பிரஷ் கொண்டு பேக்கிங் சோடாவைத் தொட்டு, பற்களைத் துலக்கி வந்தால், பற்களின் மஞ்சள் கறைகள் மறைந்து விடும்.
  • 1 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெயை வாயில் ஊற்றி, 10-15 நிமிடம் கொப்பளித்து, துப்ப வேண்டும். இதை தினமும் காலை மற்றும் இரவில் செய்து வர, நல்ல பலன் கிடைக்கும்.
  • இரவில் படுக்கும் முன், ஆரஞ்சு பழத்தின் தோலைக் கொண்டு பற்களைத் தேய்த்து, இரவு முழுவதும் ஊறவைத்து, மறுநாள் காலையில் வாயை நீரில் கழுவ வேண்டும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments