கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும் சூப்பர் வழிகள்

Report Print Printha in அழகு

ஈரப்பதம், மாசுக்கள், ஊட்டச்சத்து இல்லாமை போன்ற பல காரணங்களால், தலைமுடியின் வளர்ச்சி குறைவாக இருக்கும்..

அதிலும் குறிப்பாக தலைமுடியின் நுனிப்பகுதியில் உண்டாகும் வெடிப்புகள் முக்கிய காரணமாகும்.

கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும் இயற்கை வழி?
  • வாழைப்பழம் ஒன்றை மசித்து, 2 டேபிள் ஸ்பூன் தயிர், சிறிதளவு எலுமிச்சை சாறு மற்றும் ரோஸ் வாட்டர் ஆகியவற்றை கலந்து, வேர் முதல் முடியின் நுனிப்பகுதி வரை தடவி 1 மணிநேரம் ஊற வைத்து, குளிக்க வேண்டும்.
  • முட்டையின் வெள்ளைக்கரு மற்றும் பால் ஆகிய இரண்டையும் கலந்து, அதை தலையில் நன்கு தடவி, 20 நிமிடம் ஊறவைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
  • ஒரு பப்பாளி பழத்தை எடுத்து நன்கு அரைத்து, அதனுடன் சிறிதளவு தயிர் சேர்த்து தலைமுடியில் தடவி 45 நிமிடம் ஊறவைத்து கழுவ வேண்டும்.
  • ஆலிவ் ஆயில், விளக்கெண்ணெய் மற்றும் பாதாம் எண்ணெய் ஆகிய அனைத்தையும் சரிசம அளவில் எடுத்து வெதுவெதுப்பாக சூடேற்றி, அதை ஈரமான தலைமுடியில் தடவி, மசாஜ் செய்து 1 மணிநேரம் கழித்து, சீயக்காய் தேய்த்துக் குளிக்க வேண்டும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்