தலையில் உள்ள பேனை ஒழிக்க உடனடி தீர்வு

Report Print Printha in அழகு

தலைமுடியின் சுத்தமின்மை குறைந்தால், பேன், ஈறுகள் மற்றும் பொடுகு போன்றவற்றின் தொல்லைகள் அதிகரிக்கும்.

இப்பிரச்சனைகளை போக்க இயற்கையில் உள்ள அற்புதமான வழிகள் இதோ,

பூண்டு

பத்து பூண்டுகளை எடுத்து தோல் சீவி மைய அரைத்து, அதனுடன் 2 டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு கலந்து தலையில் தேய்த்து அரை மணி நேரம் கழித்து குளிக்க வேண்டும்.

பாதாம்

பாதாம் பருப்பை ஊறவைத்து அரைத்து, அதனுடன் எலுமிச்சை சாறு கலந்து தலையில் ஹேர் பேக்காக போட்டு 1 மணிநேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

உப்பு

உப்பு மற்றும் வினிகரை ஒன்றாக கலந்து, அதை தலை முழுவதும் தடவி, ஷவர் கேப் கொண்டு மூடி, 2 மணிநேரம் கழித்து ஷாம்பு போட்டு தலை குளிக்க வேண்டும்.

வேப்பிலை

வேப்பிலையை அரைத்து தலையில் ஹேர் பேக்காக போட்டு அரை மணி நேரம் கழித்து, தலைக்கு குளிக்கலாம். அல்லது வேப்ப எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் இரண்டையும் சமமாக கலந்து தலையில் தேய்த்து தலைக்கு குளிக்கலாம்.

வெந்தயம்

வெந்தயத்தை ஊறவைத்து, 2 மணிநேரம் கழித்து அரைத்து, அதனுடன் 4 ஸ்பூன் தேங்காய் பால் கலந்து தலைக்கு தடவி, 1 மணிநேரம் கழித்து தலைக்கு குளிக்க வேண்டும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்