தலை அரிப்பா? இதை ட்ரை பண்ணுங்க

Report Print Kavitha in அழகு

தற்போது உள்ள இளம் பெண்களுக்கு பெரும் தொல்லையாக உள்ளது தலை அரிப்பு. இதற்கு காரணம் வறண்ட முடி அல்லது தலையில் பொடுகு உண்டாவது போன்றவை.

பொடுகு ஏற்படுவதற்கு முக்கிய காரணம், முடியில் வறட்சி, மோசமான கூந்தல் பராமரிப்பு, பூஞ்சை மற்றும் கிருமி தொற்று, மோசமான உணவு முறை, அதீத பதட்டம் போன்றவையாகும்.

அதற்காக நாம் செயற்கையை அனுகாமல் இயற்கை கைவைத்தியங்களை கையாண்டு பார்ப்போம்.

டீ ட்ரீ எண்ணெய்

தலையில் ஏற்படும் அரிப்பை தடுக்க டீ ட்ரீ எண்ணெய் ஒரு சிறந்த தீர்வாகும். இதில் இருக்கும் பூஞ்சை எதிர்ப்பு தன்மை, வீக்கத்தை குறைக்கும் தன்மை மற்றும் கிருமிகளை அழிக்கும் தன்மை , அரிப்பை போக்க பெரிதும் உதவுகிறது.

பேபி ஷாம்பூவுடன் 10 முதல் 20 துளி டீ ட்ரீ எண்ணெய்யை சேர்த்து, தொடர்ந்து தலையை அலச பயன்படுத்தவும். இதன்மூலம் விரைவில் உங்கள் தலை அரிப்பு குறையும்.

தாவர எண்ணெய்யுடன் சில துளி டீ ட்ரீ எண்ணெய்யை சேர்த்து தலையில் நன்றாக மசாஜ் செய்யவும். இதனை தொடர்ந்து செய்து வரும்போது, தலை அரிப்பு ஒரு சில வாரங்களில் மறைந்து, தலை முடி புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

எலுமிச்சை சாறு

எலுமிச்சையில் ஆன்டிசெப்டிக் தன்மை அதிகமாக உள்ளது. அதனால் தலையில் ஏற்படும் அரிப்பை போக்க இது பெரிதும் உதவுகிறது. பொடுகு தொந்தரவை குறைக்கவும் எலுமிச்சை அதிகமாக பயன்படுகிறது.

புதிதாக பிழிந்த எலுமிச்சை சாறை எடுத்து உச்சந்தலையில் தடவவும். 5 நிமிடங்கள் கழித்து தலைக்கு ஷாம்பு போட்டு அலசவும். பொடுகு இல்லாமல் அரிப்பு ஏற்படும்போது, எலுமிச்சை சாறை நீரில் கலந்து தலையை அலசலாம்.

எலுமிச்சை சாறுடன் தயிர் சேர்த்து தலையில் மென்மையாக தடவவும். 5 நிமிடங்கள் ஊறியவுடன், மென்மையான ஷாம்பு கொண்டு தலையை அலசவும். தலைமுடியில் வறட்சி மற்றும் அரிப்பு குறையும் வரை இதனை தொடர்ந்து செய்யவும்

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா தலையில் உள்ள பூஞ்சை தொற்றை போக்கி அரிப்பை போக்கும். பேக்கிங் சோடாவுடன் தண்ணீர் சேர்த்து ஒரு பேஸ்ட் போல் செய்து தலையில் தடவவும்.

பேக்கிங் சோடாவை தலையில் தடவுவதற்கு முன், சிறிது ஆலிவ் எண்ணெய்யை தலை முழுதும் தடவி கொள்ளவும். பேக்கிங் சோடா பேஸ்டை தடவி 10-15 நிமிடங்கள் கழித்து தலையை நீரால் அலசவும்.

ஆப்பிள் சீடர் வினிகர்

தலை அரிப்பை உண்டாக்கும் கிருமிகளை எதிர்க்கும் ஆற்றல் ஆப்பிள் சீடர் வினிகருக்கு உண்டு. உச்சந்தலையின் pH அளவை பராமரிப்பதில் ஆப்பிள் சீடர் வினிகர் நல்ல பலனை தருகிறது. தலை முடி வறட்சி மற்றும் அரிப்பை கட்டுப்படுத்துகிறது.

தலை முடியை நன்றாக தண்ணீர் கொண்டு அலசவும். பின்பு நன்றாக காய வைக்கவும். ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் தண்ணீரை சம அளவு எடுத்து ஒரு ஸ்பிரே பாட்டிலில் ஊற்றி கொள்ளவும் . இதனை உங்கள் தலை முடியில் தெளித்து சில நிமிடங்கள் ஊற விடவும். பின்பு மென்மையான ஷாம்பு கொண்டு தலையை அலசவும்.வாரத்திற்கு இரண்டு முறை இதனை செய்யலாம்.

கற்றாழை

கற்றாழை ஜெல்லிற்கு ஈரப்பதத்தை கொடுக்கும் தன்மை உண்டு. தலையில் இருக்கும் அதிகமான வறட்சியை குறைத்து ஈரப்பதத்தை தந்து அரிப்பை கட்டுப்படுத்துகிறது. வீட்டில் கற்றாழை ஜெல்லை தயாரிக்க முடியாவிடில், கடையில் வாங்கி பயன்படுத்தலாம்.

கற்றாழை ஜெல்லை விரல்களில் தடவி, தலையில் நன்றாக மசாஜ் செய்யவும். 15 நிமிடங்கள் நன்றாக ஊறிய பின், மென்மையான ஷாம்பு கொண்டு தலையை அலசவும்.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய் தலையை ஈரப்பதத்தோடு வைப்பதால் அரிப்பை கட்டுப்படுத்துகிறது.

தலையில் தேங்காய் எண்ணெய்யை தடவவும். 1 மணி நேரம் கழித்து நறுமண பொருள் சேர்க்காத ஷாம்பு கொண்டு தலையை அலசவும். வாரத்திற்கு 3 முறை இந்த எளிய முறையை பின்பற்றலாம்.

தேங்காய் எண்ணியே சூடாக்கி, அதனை தலையில் தடவி பிறகு ஷாம்பூவால் தலையை அலசலாம்.

வாழைப்பழம்

வாழைப்பழம் சாப்பிடுவதற்கு மட்டும் அல்ல , தலை அரிப்பை குணப்படுத்தவும் பயன்படுகிறது.

இது தலை முடியை கண்டிஷன் செய்கிறது. வாழைப்பழத்தின் புத்துணர்ச்சியூட்டும் தன்மை மற்றும் ஈரப்பதத்தை உண்டாக்கும் தன்மை பொடுகை போக்கி, வீக்கத்தை குறைத்து, அரிப்பை தடுக்கிறது.

கனிந்த அவகேடோவுடன், 2 வாழை பழத்தை சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த கலவையை தலையில் தடவவும். ½ மணி நேரம் கழித்து நீரால் தலையை அலசவும்.

நல்லெண்ணெய்

வறண்ட தலையில் அரிப்பை போக உதவும் மிக முக்கியமான ஒரு பொருள் நல்லெண்ணெய் .

இது தலை முடிக்கு போஷாக்கை தருகிறது. உச்சந்தலையை குளிர்வித்து, அரிப்பை குறைக்கிறது. இரவு நேரத்தில் இதனை செய்வது நல்ல பலனை தரும். நல்லெண்ணெய்யை சூடாக்கவும்.

எண்ணெய்யை எடுத்து, தலையில் மென்மையாக மசாஜ் செய்யவும். ஒரு துண்டை வெந்நீரில் நனைத்து தலையில் சுற்றி கட்டவும். 10 நிமிடங்கள் அப்படியே இருக்கவும். 10 நிமிடம் கழித்து துண்டை எடுத்து விட்டு, இரவு முழுதும் அப்படியே விடவும். மறுநாள் காலை, மென்மையான ஷாம்பு கொண்டு தலையை அலசவும். தலையில் அரிப்பு போகும்வரை இதனை தொடர்ந்து செய்து வரவும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers