சொரசொரப்பான வறண்ட பாதங்களா? சில வழிகள் இதோ

Report Print Printha in அழகு
557Shares
557Shares
lankasrimarket.com

கடினமான சோப்பை அடிக்கடி பயன்படுத்துவது, உடலில் குறைவான நீர்ச்சத்து மற்றும் அதிகமான வெப்பநிலை ஆகியவை காரணமாக சருமம் வறண்டு, வெடிப்புகள் உண்டாகும்.

பாதங்களின் வறட்சியை போக்குவது எப்படி?
  • தினமும் குளிக்கும் போது 5-10 நிமிடங்களுக்கு மேல் எடுத்துக் கொள்ளக் கூடாது. ஏனெனில் பாதங்கள் நீண்ட நேரம் நீரில் இருக்கும் போது பாதத்தின் இயற்கையான எண்ணெய் போய்விடும்.
  • சூடான நீரில் தினமும் குளிக்கக் கூடாது. ஏனெனில் சூடான நீர், சருமத்தில் உள்ள அதிகமான எண்ணெயை உரித்து, சருமத்தை கடினமாக மாற்றிவிடும்.
  • பாதங்களை கழுவிய உடன், காய வைத்து சிறிதளவு மாய்ஸ்சரைசர் தடவ வேண்டும். ஆனால் கால்களின் விரல்களுக்கு இடையில் தடவ கூடாது.
  • தினமும் குளித்து முடித்ததும், பாதங்களை ஈரப்பதம் இல்லாமல் துணியால் துடைத்து, சிறிது விளக்கெண்ணெய்யை தேய்த்து வரலாம். இதனால் பாத வெடிப்பு வராது.
  • மருதாணி இலைகளை நன்றாக அரைத்து, பித்த வெடிப்பு உள்ள இடங்களில் தேய்த்து உலர விட்டு நீரில் கழுவி வர நாளடைவில் பித்த வெடிப்பு குணமாகும்.
  • பப்பாளி பழத்தை நன்கு அரைத்து, அதை பாதங்களில் வெடிப்பு உள்ள பகுதிகளில் தேய்த்து உலர வைத்து நீரில் கழுவி வர பித்த வெடிப்பு சரியாகும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்