கருப்பு திராட்சையுடன் இந்த பொருட்களை கலந்து முகத்தில் தடவுங்கள்: அற்புதம் இதோ

Report Print Printha in அழகு
154Shares

திராட்சை பழத்தில் நம அழகை பாதுகாக்கும் விட்டமின் C மற்றும் ஆன்டி- ஆக்ஸிடன்டுகள் ஏராளமாக நிறைந்துள்ளது.

இந்த திராட்சை பழத்தினை நம் முகத்திற்கு பயன்படுத்தினால், சருமத்தில் உள்ள சுருக்கங்கள், கரும்புள்ளிகள், கண்களுக்கு கீழே உள்ள கருவளையங்கள் போன்றவை மறைந்து அழகான மற்றும் ஜொலிக்கும் சருமத்தை பெறலாம்.

திராட்சையை எதனுடன் சேர்த்து பயன்படுத்த வேண்டும்?

  • 2-3 கருப்பு திராட்சைகளை ஒன்றாக சேர்த்து அரைத்து அதில் 1 டீஸ்பூன் யோகார்ட் மற்றும் சிறிதளவு எலுமிச்சை சாறை கலந்து கழுத்து மற்றும் முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவ வேண்டும்.

  • முல்தானி மெட்டி, ரோஸ் வாட்டர், 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து அதை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும்.

  • சிறிதளவு திராட்சை பேஸ்ட், க்ரீம், அரிசி மாவு மற்றும் கேரட் சாறு போன்ற அனைத்தையும் நன்றாக கலந்து முகம் மற்றும் கழுத்தில் தடவி 30 நிமிடங்கள் கழித்து தண்ணீரில் கழுவ வேண்டும்.

  • தேன் மற்றும் திராட்சையை எடுத்து நன்றாக குழைத்து பேஸ்ட் செய்து அதனை முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து நீரில் கழுவ வேண்டும்.

  • திராட்சை பழங்களை மட்டும் அரைத்து நேரடியாக முகத்தில் தேய்த்து மசாஜ் செய்து வர, முகம் பளிச்சிடும்.

  • திராட்சை மற்றும் பப்பாளியை ஒன்றாக அரைத்து முகத்திற்கு மாஸ்க் போட்டு 15 நிமிடங்கள் கழித்து கழுவினால் முகம் பளபளப்பாக மாறும்.

  • ஆரஞ்ச் ஜூஸை சிறிதளவு எடுத்து அதனுடன் 2 ஸ்பூன் அளவு திராட்சை சாறையும் கலந்து முகத்தில் தடவி வர முகம் பொலிவு பெரும்.

  • பேக்கிங் சோடா, கோதுமை மாவு மற்றும் திராட்சை போன்றவற்றை ஒன்றாக கலந்து முகத்திற்கு பேக் போட்டு வர முகம் அழகாகும்.

  • சிறிதளவு புதினா இலைகளை எடுத்து அதனுடன் திராட்சை மற்றும் எலுமிச்சை சாறை கலந்து முகத்திற்கு பேக் போட்டு வரலாம்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்