ஜப்பானிய பெண்கள் தாங்கள் என்றென்றும் அழகு பதுமையாக ஜொலிக்க பழுப்பு நிற அரிசி நீரை பயன்படுத்துகின்றனர்.
இதில் விட்டமின் B1, B2, B3, B6, E, K, புரதச்சத்து மற்றும் நார்ச்சத்து போன்றவை அதிகமாக உள்ளது, உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமில்லாமல் சரும அழகிற்கும் உதவுகிறது.
தேவையான பொருட்கள்
- பழுப்பு அரிசி - ½ கப்
- தண்ணீர் - 1 கப்
- பஞ்சு - 1 கப்
செய்முறை
அரிசியை அழுக்கு நீக்கி சுத்தமாக கழுவி அதில் தண்ணீர் ஊற்றி 15 நிமிடம் ஊறவைத்து, அந்த நீரை மட்டும் வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
பயன்படுத்தும் முறை
வடிகட்டிய நீரில் பஞ்சை நனைத்து முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவி சுத்தம் செய்து, 10 நிமிடம் மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும்.
அதன் பிறகு சாதாரண நீரில் முகத்தை கழுவ வேண்டும். இம்முறையை தினமும் தொடர்ந்து செய்து வர முகம் பளிச்சிடும்.
மற்றொரு முறை
பழுப்பு அரிசியை நன்றாக அரைத்து அதனுடன் 1 ஸ்பூன் யோகர்ட்டை சேர்த்துக் கொள்ள வேண்டும். அதன் பின் முகத்தை கழுவி விட்டு அதை முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவ வேண்டும்.
இம்முறையை 2 வாரங்கள் தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
அரிசி நீரில் பஞ்சை நனைத்து முகத்தில் தடவி 10 நிமிடங்கள் கழித்து முகம் காய்ந்தவுடன் சுத்தமான நீரில் முகத்தை கழுவி வந்தால் முகத்தில் உள்ள பருக்கள் மறையும்.
ஒரு சுத்தமான துணியை பழுப்பு அரிசி ஊறவைத்த நீரில் நனைத்து அதை முகத்தில் ஒத்தி எடுத்து முகத்தை காய வைக்க வேண்டும். இம்முறையை தொடர்ந்து 10 நாட்கள் செய்து வந்தால் சருமப் பிரச்சனைகள் அனைத்தும் விலகும்.