சொட்டை தலைக்கு இந்த விதையின் ஜெல்லை பயன்படுத்துங்கள்: புதிய முடி வளரும்

Report Print Printha in அழகு
881Shares

அடர்த்தியான, கருமையான, நீளமான, வலுவான போன்ற தலைமுடி அம்சத்தில் எதாவது 2 அம்சங்கள் இருந்தால் கூட தலைமுடியை காண்பதற்கு அழகாக இருக்கும்.

ஆனால் இப்பிரச்சனைகளை விட சிலருக்கு வழுக்கை, சொட்டை போன்ற பிரச்சனைகளும் ஏற்படுகிறது.

இத்தகைய தலைமுடி பிரச்சனைகளை சரிசெய்ய ஆளி விதைகளில் இருக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் பெரிதும் உதவுகிறது.

தேவையான பொருட்கள்
  • ளி விதைகள் - 2 டேபிள் ஸ்பூன்
  • தண்ணீர் - 1 கப்
  • கற்றாழை ஜெல் - 1 ஸ்பூன்
  • வாசனை எண்ணெய் - 2 ஸ்பூன்
தயாரிப்பது எப்படி?

முதலில் ஆளி விதைகளை தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து ஜெல் தன்மை வரும் வரை தொடர்ந்து கிளறி கொண்டே இருக்க வேண்டும்.

அதன் பின் ஜெல்லை வடிகட்டி எடுத்து அந்த ஜெல்லை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி, தேவைப்பட்டால் கற்றாழை ஜெல் மற்றும் நறுமண ஆயிலை அதனுடன் சேர்த்து கொள்ளலாம்.

பயன்படுத்தும் முறை

ஆளிவிதையில் தயாரித்த ஜெல்லை தலையில் நன்கு தேய்த்து, மசாஜ் செய்து ஒரு பெரிய துண்டை வெந்நீரில் நனைத்து பிழிந்து, அதை தலையில் சுற்றி கட்டி 30 நிமிடம் கழித்து, மென்மையான ஷாம்பு கொண்டு தலையை கழுவ வேண்டும்.

இதை வாரத்திற்கு 2 முறைகள் பின்பற்றி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

நன்மைகள்
  • கூந்தல் வளர்ச்சி அதிகரிக்கும்.
  • தலைமுடியின் வலிமை அதிகமாகும்.
  • பொடுகு மற்றும் அரிப்பு பிரச்சனை நீங்கும்.
  • முடி வெடிப்பு மற்றும் முடி உதிர்வது குறையும்.
  • சொட்டை மறைந்து புதிய முடி வளரும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்