வாரம் 1 நாள் தேங்காய் பாலை பயன்படுத்துங்கள்: அப்பறம் தெரியும் அதிசயம்

Report Print Printha in அழகு
610Shares
610Shares
lankasrimarket.com

குளிர்ச்சியான தேங்காய் பாலில் புரதச்சத்துக்கள், ஆன்டி-ஆக்ஸிடென்டுகள் போன்றவை அதிகம் நிறைந்துள்ளது. இந்த தேங்காய் பாலில் ஆரோக்கிய நன்மைகள் இருக்கும் அதே சமயம் சரும அழகினை மேம்படுத்தவும் பயன்படுகிறது.

தேங்காய் பாலை எப்படி பயன்படுத்த வேண்டும்?
  • 1 டீஸ்பூன் கேரட் சாறு மற்றும் தேங்காய் பால் ஆகிய இரண்டையும் சம அளவு கலந்து முகத்தில் தடவி 10 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும்.
  • 1 டீஸ்பூன் முல்தானிமட்டி, 1 டீஸ்பூன் தேங்காய் பால் ஆகிய இரண்டையும் சம அளவு கலந்து முகத்தில் பேக் போட்டு வர வேண்டும்.
  • 2 டீஸ்பூன் தேங்காய் பால் மற்றும் 1 டீஸ்பூன் கடலை மாவு ஆகிய இரண்டையும் கலந்து பேஸ்ட் செய்து அதை முகத்தில் தடவி காய்ந்த பின் கழுவ வேண்டும்.
  • உருளைக்கிழங்கு ஜூஸ், தேங்காய் பால் மற்றும் பயிற்றம் மாவு ஆகிய மூன்றையும் கலந்து பேஸ்ட் செய்து அதை முகத்திற்கு பேக் போட்டு வர வேண்டும்.
  • இளநீரில் உள்ள வழுக்கை, தேங்காய்ப் பால் ஆகியவற்றை அரைத்து குளிப்பதற்கு முன் தலை முதல் பாதம் வரை நன்றாக தடவி சில நிமிடம் கழித்து குளித்து வர வேண்டும்.
  • நெல்லிக்காய் பவுடர், மருதாணி பவுடர் மற்றும் வெந்தய பவுடர் ஆகிய அனைத்தையும் தேங்காய் பாலுடன் கலந்து தலையில் தடவி சில நிமிடங்கள் மசாஜ் செய்து 1 மணி நேரம் கழித்து தலைமுடியை அலச வேண்டும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்