பொடுகு தொல்லை நீங்க இதை ட்ரை பண்ணி பாருங்க!

Report Print Kavitha in அழகு
420Shares
420Shares
ibctamil.com

தலை முடியானது ஒருவருடைய அழகை நிர்ணயிக்க முக்கியமானதாகும்.

ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வு, நோய் எதிர்ப்புத் தன்மையின் மாறுபாடு, அதீத மனஉளைச்சல், தட்பவெப்பநிலை மாறுபாடு, முகப்பரு, எண்ணெய்ப் பசை அதிகம் உள்ள தோல், தலையைச் சுத்தமில்லாமல் காரணமாக பொடுகு ஏற்படுகின்றது.

பொடுகு தொல்லை தீர்கக இயற்கை வழிமுறைகளை பின்பற்றுவோம்.

 • சாம்பார் வெங்காயம் (சின்ன வெங்காயம்) கொஞ்சம் எடுத்து அரைத்து தலையில் தேய்த்து 15 நிமிஷம் கழித்து குளித்து வந்தால் நாளடைவில் நல்ல பயனை பெறலாம்.
 • பாலுடன் மிளகு பவுடரை சேர்த்து தலையில் தேய்க்கவும். 15 நிமிஷம் கழித்து குளிக்கவும்.
 • தலையில் சிறிதளவு தயிர் தேய்த்துச் சில நிமிடங்கள் கழித்துச் சீயக்காய் தேய்த்துக் குளிக்கலாம்.
 • வாரம் ஒரு முறையாவது நல்லண்ணை தேய்த்து குளிக்க வேண்டும்.
 • பசலை கீரையை அரைத்து தலையில் தேய்த்து குளித்தல் நல்ல பயன் பெறலாம்.
 • வெந்தய பவுடரை தலையில் தேய்த்து குளித்தால் பொடுகு தொல்லையும் தீரும் உஷ்ணமும் குறையும்.
 • அருகம்புல் சாறு எடுத்து தேங்காய் எண்ணையுடன் சேர்த்து நல்லா காய்ச்சி அப்புறம் ஆறவைத்து தினசரி இதனை தலையில் தேய்த்தால் பொடுகு மறையும்.
 • வேப்பிலைசாறும் துளசி சாறும் கலந்து தலையில் தேய்கலாம்.
 • வசம்பு பவுடரை தேங்காய் எண்யெயில் ஊறவைத்து தேய்கலாம்.
 • தலைக்கு குளித்தபின்பு தலையை துவட்டாமல் கொஞ்சம் வினிகரை தண்ணீரில் கலந்து தலைக்கு குளித்து வந்தால் நல்ல பயன் பெறலாம்.
 • மருதாணி இலையை அரைக்கனும். அதனுடன் கொஞ்சம் தயிர், எழுமிச்சை சாறு கொஞ்சம் சேர்த்து தலையில் தேய்த்து வந்தால் நல்ல பயன் கிடைக்கும்.
 • வேப்பிலை சிறிதளவும் அதனுடன் கொஞ்சம்மிளகையும் சேர்த்து அரைத்து தலையில் தேய்த்து 1மணி நேரம் ஊரவைத்து பின்பு குளிக்கலாம்.
 • மண்டை கரப்பான் நோய் குணமாக பப்பாளி பாலையும் படிகாரத்தையும் சேர்த்து தடவலாம்.
 • காய்ந்த வேப்பம்பூ 50 கிராம் எடுத்து, 100 மி.லி. தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு காய்ச்ச வேண்டும். இளஞ்சூடு பதத்துக்கு ஆறியதும், வேப்பம்பூவுடன் சேர்த்து எண்ணெயைத் தலையில் தேய்த்து 1/2 மணி நேரத்துக்குப் பிறகு குளிக்க வேண்டும்.
 • கற்றாழைச் சாற்றைத் தலையின் மேல் பகுதியில் நன்கு படும்படி தேய்த்து ஊறவைத்து, சிறிது நேரம் கழித்துக் குளித்தால் பொடுகு தொல்லை நீங்கும்.
 • நெல்லிக்காய் தூள், வெந்தயப் பொடி, தயிர், கடலைமாவு கலந்து தலையில் தேய்த்து, சிறிதுநேரம் கழித்துக் குளிக்க வேண்டும். வாரம் ஒரு முறை இவ்வாறு செய்வது நல்லது.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்