எலுமிச்சையுடன் இதை கலந்திடுங்கள்: வழுக்கை தலைக்கு தீர்வு

Report Print Thuyavan in அழகு
901Shares
901Shares
ibctamil.com

கூந்தல் உதிர்வது சாதாரணம் என்றாலும் கூட, அளவுக்கு அதிகமான முடி உதிர்வு என்பது கூந்தலின் அடர்த்தியை குறைத்து வழுக்கை தலையை உண்டாக்கும்.

வயதானவர்களாக இருந்தால் பரவாயில்லை, இளம் வயதினரும் இந்த பிரச்சனையை சந்திக்கின்றனர்.

எலுமிச்சையுடன் இந்த பொருட்களையெல்லாம் சேர்த்து தினமும் பயன்படுத்தினாலே மிக எளிமையான தொடர்ந்து செய்து வந்தால், முடி உதிர்வு பிரச்சனைக்கு முழுமையான தீர்வு கிடைத்துவிடும்.

எலுமிச்சையுடன் ஆலிவ் ஆயில்

எலுமிச்சை சாறை 2 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயிலுடன் கலந்து, மிக்ஸ் செய்த எண்ணெய்யை கொண்டு, முடியின் வேர்க்கால்களில் நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். இதனை 40 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்க வேண்டும். இப்படி செய்தால் வேர்கால்கள் பலமடையும்.

எலுமிச்சையுடன் விளக்கெண்ணெய்

எலுமிச்சை மற்றும் விளக்கெண்ணெய் சேர்த்து, தலையில் அப்படியே 20 முதல் 30 நிமிடங்கள் விட்டுவிட வேண்டும். பின்னர் தலைமுடியை அலசுங்கள் முடி வலுவலுப்பு தன்மையுடன் இருக்கும்.

எலுமிச்சையுடன் தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய்யில் மசித்த பூண்டை சேர்த்து இரண்டும் டேபிள் ஸ்பூன் அளவிற்கு எலுமிச்சை சாறையும் சேர்த்துக்கொண்டு வந்தால் முடி உதிர்தல் பிரச்சனை தீரும். இதனை மாதத்திற்கு ஒருமுறை செய்தல் நன்று.

எலுமிச்சையுடன் கற்றாழை ஜெல்

கற்றாழை ஜெல்-லை எலுமிச்சை சாறுடன் சேர்த்து முடியின் வேர்க்கால்களில் மசாஜ் செய்து கொள்ள வேண்டும். இருபது நிமிடங்கள் இதனை அப்படியே விட்டுவிட்டு வாரத்திற்கு இரு முறை செய்து வந்தால் அடர்த்தி கூடும். தலையில் தூசி படியாமல் பார்த்து கொள்ளும்.

எலுமிச்சையுடன் இளநீர்

எலுமிச்சை மற்றும் இளநீர் கலவையானது உங்களது கூந்தலை வலிமையாக்கும். இதனால் முடி உதிர்வு குறையும். நெல்லிக்காய் எண்ணெய்யுடன் வேர்க்கால்களில் தடவி நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். ஷாம்ப்பூ செய்யததை கூட வெங்காய சாறு பலனளிக்கும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்