ஆரோக்கியத்துடன் அழகையும் கூட்டும் கிரீன் டீ

Report Print Kabilan in அழகு
344Shares
344Shares
lankasrimarket.com

கிரீன் டீ, நமது உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமன்றி, அழகை பாதுகாக்கவும் பலவகையில் உதவுகின்றது.

கிரீன் டீயை முகத்தின் மீது பூசுவதன் மூலமாக, புற ஊதாக் கதிர்களினால் ஏற்படும் பாதிப்புகளான சரும் எரிச்சல், கருமை, குழிகள் ஆகியவற்றை சரி செய்யலாம்.

முகப்பருக்கள் அதிகமாக உள்ளவர்கள், முகத்திற்கு பூசும் Cream உடன் 2 சதவித அளவில் கிரீன் டீயை கலந்து, 6 வாரங்களுக்கு பூசினால் பருக்கள் குறையும்.

மேலும், 8 வாரங்களுக்கு கிரீன் டீயை முகத்தில் பூசினால், முகத்தின் எண்ணெய் பசையானது குறையும். எதிர்காலத்தில் முகப்பருவும் ஏற்படாது.

கிரீன் டீ பொட்டலத்தை காயம் உள்ள இடத்தில் வைத்து ஒத்திடம் கொடுத்தால், காயம் இருந்த இடம் தெரியாமல் மறையும்.

கிரீன் டீயில் ஆண்டி-மைக்ரோபயல் மூலக்கூறுகள் உள்ளதால், கொசுக்கள் மற்றும் பூச்சிகளினால் உண்டான வீக்கங்கள், காயங்களை குணமாக்கும்.

கண்களுக்கு கீழே உள்ள கருவளையங்களைப் போக்க, கிரீன் டீ பொட்டலங்களை அதன் மீது வைத்து 20 நிமிடங்கள் ஓய்வெடுக்க வேண்டும். இதனால் கருவளையம் நீங்குவதோடு, சுறுசுறுப்பும் அதிகரிக்கும்.

மேலும், கிரீன் டீ சருமத்தை இறுகச் செய்வதோடு, சருமத்துளைகளையும் அடைக்கும். சருமத்தின் நிறத்தை மேம்படுத்தவும் கிரீன் டீ உதவுகிறது.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்