முகத்தில் மேடு பள்ளங்கள் உள்ளதா? இந்த பேஸ் பேக்குகளை டிரை பண்ணி பாருங்க

Report Print Santhan in அழகு
541Shares
541Shares
ibctamil.com

முகத்தில் சிலருக்கு அசிங்கமாக பள்ளங்கள் காணப்படும். இதற்கு காரணம் சருமத் துளைகள் திறந்து மூடாமல் இருப்பது தான், இதனால் முகத்தில் பருக்கள், கரும்புள்ளிகள் போன்றவை அவ்வப்போது வந்து முகத்தின் அழகையே அசிங்கமாக காட்டும்.

அதுமட்டுமின்றி, இத்தகையவர்களது முகத்தின் எண்ணெய் அதிகம் வழிந்து காணப்படும்.

இப்படி முக அழகை அசிங்கமாக காட்டும் மேடு பள்ளங்களை போக்க, ஒருசில பேஸ் பேக்குகளை கொண்டு எளிதில் நீக்கலாம்.

கீழே ஆன்டி பாக்டீரியல் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட் பண்புகள் நிறைந்த பேஸ் பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை தவறாமல் பயன்படுத்தி வந்தால், முகத்தில் அசிங்கமாக உள்ள மேடு பள்ளங்களை மறைக்கலாம்.

முட்டை மற்றும் எலுமிச்சை சாறு

ஒரு பௌலில் ஒரு முட்டையின் வெள்ளைக்கருவை எடுத்துக் கொண்டு, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

பின் இந்த கலவையை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவ வேண்டும்.

15 முதல் 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவுங்கள். இப்படி வாரத்திற்கு 1 முதல் 2 முறை பயன்படுத்தினால் முகத்தில் உள்ள மேடு பள்ளங்கள் விரைவில் மறையும்.

வாழைப்பழம் மற்றும் பாதாம் எண்ணெய்

நன்கு கனிந்த வாழைப்பழத்தை மசித்து, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் பாதாம் எண்ணெய் சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும்.

இந்த கலவையை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.

மஞ்சள் மற்றும் பால்

ஒரு சிறிய பௌலில் 1 டீஸ்பூன் பாலில் 1 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.

பின் அந்த கலவையை முகத்தில் தடவி, 10 நிமிடம் ஊற வையுங்கள்.

பின்பு முகத்தை நீரால் கழுவுங்கள். இப்படி தினமும் செய்து வர, முகத்தில் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்