முகத்தில் கருமை மற்றும் பருக்கள் நீங்கனுமா? எலுமிச்சை போதுமே

Report Print Printha in அழகு
551Shares

பருக்கள், முகப்பரு கருமை போன்ற சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு எலுமிச்சை பழத்தை பயன்படுத்தியே நிரந்தர தீர்வினை பெறலாம்.

எலுமிச்சை சாற்றை எப்படி பயன்படுத்துவது?
  • எலுமிச்சையை சாறு எடுத்து, அதில் சிறிது தண்ணீர் கலந்து, அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி 10 நிமிடம் கழித்து கழுவ சருமத்தில் உள்ள கருமையானது நீங்கும்.
  • எலுமிச்சை சாற்றில் தயிர் சிறிது கலந்து, அதை முகத்தில் தடவி உலர வைத்து வாரம் ஒருமுறை முகத்திற்கு மாஸ்க் போட்டால், சருமத்தில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.
  • எலுமிச்சை சாற்றுடன், முட்டையின் வெள்ளைக்கருவை கலந்து அதை முகத்தில் தடவி உலர வைத்து கழுவினால் சருமம் வெள்ளையாகும்.
  • பாலில் சில துளிகள் எலுமிச்சை சாற்றினை விட்டு கலந்து, அந்த கலவையை முகத்தில் மற்றும் கருமையாக உள்ள இடங்களில் தடவி உலர வைத்து கழுவினால் கருமை மாறும்.
  • எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள், எலுமிச்சை சாற்றில் ரோஸ் வாட்டர் கலந்து, முகத்திற்கு மாஸ்க் போட்டால் நல்ல பலன் கிடைக்கும்.
  • ஆலிவ் ஆயிலுடன் எலுமிச்சை சாற்றினை கலந்து, அதை முகத்திற்கு மாஸ்க் போட்டால், சருமத்தின் நிறம் அதிகரிப்பதோடு, சருமத்தில் உள்ள தேவையற்ற தழும்புகளும் மறையும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்