அழகான முறையில் தாடி வளர வேண்டுமா இந்த ஒரு எண்ணெய் போதும்

Report Print Trinity in அழகு

ஆண்களுக்கு அழகு சேர்ப்பது தாடிதான். பெண்களை ஈர்ப்பதும் ஆண்களின் தாடிதான். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த தாடியை எப்படி அழகாக வளர்ப்பது என்பது பற்றிய ரகசிய குறிப்புகள் உங்களுக்காக.

நெல்லிக்காய் என்பது முதுமை நீக்கும் மருந்து என்பது ஔவையார் காலத்திலிருந்தே நிரூபிக்கப்பட்டு வந்துள்ளது. இத்தகைய நெல்லிக்காய்களை கொண்டு பல அழகு ரகசியங்கள் ஏற்கனவே வெளிவந்திருந்தாலும், இதே நெல்லிக்காய்தான் உங்கள் தாடியையும் அழகுபடுத்த போகிறது என்றால் ஆச்சர்யம்தான் இல்லையா.

இந்த நெல்லிக்காய் எண்ணெய் முடி வளர்வதை அதிகரித்து முடியை ஆரோக்கியமானதாக பிரகாசிக்கவும் செய்கிறது. இதனை பயன்படுத்தி உங்கள் தாடிக்கு தினமும் ஊட்டச்சத்து கொடுங்கள். பின்பு உங்கள் தாடியை வைத்து பலவித டிசைன்களில் நீங்களே ட்ரெண்ட் மேக்கராக வலம் வரலாம்.

நெல்லிக்காய் எண்ணெய் தயாரிப்பு முறை

நெல்லிக்காய் பொடி தற்போது எல்லா கடைகளிலும் கிடைக்கிறது. மருந்து கடைகளில் கூட கிடைக்கும் இந்த நெல்லிக்காய் பொடியை இரண்டு ஸ்பூன் எடுத்து கொள்ளுங்கள்.

அதனோடு இரண்டு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயையை சேர்த்து கொள்ளுங்கள்

இந்த இரண்டு பொருட்களை ஒன்றாக கலந்து இதன் நிறம் பழுப்பு வண்ணம் ஆகும்வரை சூடுபடுத்தி விடுங்கள்.

ஆறியபின் வடிகட்டி சுத்தமான பாத்திரத்தில் எடுத்து வைத்து கொள்ளுங்கள்.

வாரத்திற்கு நான்கு முறையாவது இப்படி தயாரித்த எண்ணெய் கொண்டு 20 நிமிடங்கள் உங்கள் தாடியை மசாஜ் செய்ய வேண்டும்.

அதன்பின் உங்கள் தாடி ஒரே சமயத்தில் மென்மையாகவும் அதே சமயம் அடர்த்தியாகவும் மாறியிருப்பதை பார்ப்பீர்கள். அதன் பின் உங்கள் பின்னால் பெண்கள் சுற்றும் மாயம் காண்பீர்கள் என்பதில் சந்தேகமே இல்லை .

மேலும் தாடி முடி உதிராமல் இருக்க ஒரு நெல்லிக்காய் பேக் செய்யும் முறையையும் பார்க்கலாம்.

ஆம்லா - சீயக்காய் தாடி பேக்:

தேவை :

  • நெல்லிக்காய் தூள் - 2 தேக்கரண்டி
  • சீயக்காய் - 2 தேக்கரண்டி
  • ரோஸ் வாட்டர் - 4 தேக்கரண்டி

செய்முறை :

ஆம்லா தூள் மற்றும் சீயக்காயை ரோஜா நீருடன் சேர்க்கவும். இவற்றை கலந்து ஒரு பேஸ்ட்டாகச் செய்யவும். இந்த கலவையை தாடியில் தடவ வேண்டும் .

ஒரு மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் அலசி விடவும்.இதற்கு ஷாம்பூ தேவையில்லை, காரணம் சிகைக்காய் இயற்கையாவே கூந்தலை சுத்தம் செய்யும் வேலை செய்கிறது. இப்படி வாரம் ஒருமுறை செய்யவும்.

இப்படி செய்து முடித்த பின் வாசனைக்காக ஏதாவது வாசனை எண்ணையை லாவெண்டர் ஆயில் போன்ற ஏதோ ஒரு எண்ணெயையை தாடியில் தடவி கொள்ளவும்.

இவ்வாறு செய்து வந்தால் தாடியில் முடி கொட்டும் பிரச்சனை வெகு சீக்கிரம் சரியாகி விடும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்