எவ்வளவு வயசானாலும் இளமையாக இருக்கணுமா? இந்த உணவுகளை சாப்பிடாதீங்க

Report Print Kabilan in அழகு

நாம் என்ன மாதிரியான உணவுகளை சாப்பிடுகிறோமோ, அதைப் பொறுத்து தான் நமது உடல் ஆரோக்கியம் மற்றும் சரும வெளிப்பாடுகள் அமையும்.

சரியான உணவுகளை சரிவிகிதத்தில் சாப்பிட்டு வந்தால் ஆரோக்கியத்துடனும், இளமையுடனும் இருக்கலாம். ஆனால், தீமை விளைவிக்கக்கூடிய உணவுகளை தான் நம்மில் பலர் அதிகமாக உட்கொள்கிறோம்.

இதனால் நம்முடைய சருமம் பாதிக்கப்பட்டு நீர்ச்சத்தை இழக்கும். உடல் கெடுவதுடன் முதிர்ந்த தோற்றமும் நமக்கு வந்துவிடும்.

எனவே, நமக்கு வயது கூடினாலும் இளமையான தோற்றத்துடன் இருக்க வேண்டும் என்றால், சில வகை உணவுகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

அந்த வகை உணவுகள் குறித்து இங்கு காண்போம்.

கேக் வகைகள்

டோனட்ஸ், கேக் போன்ற இனிப்பு வகை உணவுகளை சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு பாதிப்பு ஏற்படுவதுடன், மிக வேகமாக முதிர்ந்த தோற்றத்தையும் கொடுத்துவிடும். ஏனெனில், இவை மிகுந்த சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகள் ஆகும்.

இவை நமது சருமத்திற்கு வறட்சியை ஏற்படுத்தும். இதனால் முகத்தில் சுருக்கங்கள் உண்டாகும்.

Vegetable Oil

அதிகப்படியான அளவில் சுத்திகரிக்கப்பட்ட தாவர எண்ணெய், சோயாபீன் எண்ணெய், கனோலோ எண்ணெய் போன்றவை சருமத்தில் உள்ள செல்களின் திசுக்களை நேரடியாக தாக்கி பாதிப்படையச் செய்யும்.

இந்த வகை எண்ணெய்யை தொடர்ந்து பயன்படுத்தினால், வயது முதிர்ந்த தோற்றம் வருவதுடன் இதயம் தொடர்பான நோய்கள் வருவதற்கு வாய்ப்புகள் அதிகமாகும்.

எனவே இந்த எண்ணெய் வகைகளை தவிர்க்க வேண்டும். இவற்றுக்கு பதிலாக செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் அல்லது ஆலிவ் ஆயிலைப் பயன்படுத்தலாம்.

சர்க்கரை

சர்க்கரையை நாம் நேரடியாக உட்கொள்வதில்லை. ஏனெனில் நாம் சாப்பிடும் உணவுகளிலேயே அது உள்ளது. குளிர்பானங்கள், சாஸ், இனிப்பு வகைகள் என அன்றாடம் நாம் சர்க்கரையை இந்த வழிகளில் உட்கொள்கிறோம்.

ஆனால், இந்த சர்க்கரை உணவுகள் நோய்களை உண்டாக்குவதுடன், விரைவாக வயது முதிர்ந்த தோற்றத்தையும் அளிக்கும். எனவே இவற்றை தவிர்ப்பது நல்லது.

மது

நமது சருமம் ஆரோக்கியமாக இருப்பதற்கு காரணம் கல்லீரலின் ஆரோக்கியம் தான். எனவே கல்லீரலின் ஆரோக்கியம் என்பது மிக முக்கியமாகும். இல்லையெனில் உடலில் டாக்சின்கள் அதிகரித்துவிடும்.

இதனால் இயல்பாகவே சருமம் வேகமாக பாதிப்படையும். இதற்கு காரணம் மது பழக்கமும் தான். ஆல்கஹால் எனும் மதுவை குடிப்பவர்களுக்கு முகச்சுருக்கம், முகப்பருக்கள், சரும வீக்கம் போன்றவை ஏற்படும். எனவே இதனை அறவே தவிர்ப்பது இளமை தோற்றத்திற்கு வித்திடும்.

Fast Food

Fast Food எனும் அதிவேகமாக, அதிக அளவு உப்புடன் சமைக்கப்பட்ட உணவுகள், உடல் ஆரோக்கியத்திற்கு மிகுந்த கெடுதலை உண்டாக்கும். பர்கர், பிரைடு ரைஸ் போன்றவை வயதின் தோற்றத்தை மிக வேகமாக மாற்றி விடும். எனவே, இந்த வகை உணவுகளை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

உப்பு

உணவில் தேவைக்கு ஏற்ற அளவே உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும். ஆனால், சுவைமிகுதிக்காக அதிகளவில் உப்பை சேர்த்துக் கொண்டால், ரத்தத்தின் நீர்மத் தன்மை குறைந்து விடும்.

மேலும் மூட்டு, விரல்களில் வீக்கம் ஏற்படும். சிறுநீரக வீக்கமும் உண்டாகும். அத்துடன் உயர் ரத்த அழுத்தம், எலும்பு தேய்மானம் போன்றவையும் உண்டாகும். எனவே உணவில் உப்பை குறைந்த அளவே சேர்த்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் விரைவான வயது முதிர்ச்சியை நமது உடல் எட்டி விடும்.

காரமான உணவுகள்

காரமான உணவுகளை அதிகமாக சாப்பிடுவதன் மூலம் மிக வேகமான முதிர்ந்த தோற்றம் உண்டாகும். இவை நம்முடைய ரத்தக் குழாய்களை நீர்த்தன்மை குறைய செய்து வறட்சியை உண்டாக்கும். இதனால் இயல்பாகவே சருமம் வறட்சியடைந்து விடும். எனவே, காரமான உணவுகளை தவிர்ப்பது நல்லது.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்