தக்காளி சாற்றின் நன்மைகள் தெரியுமா?

Report Print Jayapradha in அழகு

தக்காளியில் உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான அயோடின், கந்தகம், மக்னீஷியம், பொட்டாசியம், சோடியம், இரும்பு சுண்ணாம்பு போன்ற சத்துக்களும் உள்ளன.

சிறு நீர் எரிச்சல், மேக நோய், உடலில் வீக்கம், உடல் பருமன், நீரிழிவு, குடல் கோளாறுகள், கல்லீரல் கோளாறுகள் முதலியவை குணமாகவும் தக்காளிச் சாறு சிறந்தது.

தக்காளி சாறின் அழகு குறிப்புகள்
  • சிலருக்கு அவர்களின் இளமை தோற்றம் மறைந்து முதுமை தோற்றம் தோன்றுவதற்கு முகத்தில் தோன்றும் முகச்சுருக்கங்களே காரணம். அத்தகைய முகச்சுருக்கங்கள் மறைய தக்காளிச்சாற்றை முகத்தில் பூசி வருவதால் தோல் மென்மையடைவதுடன் குளிர்ச்சியும் உண்டாகும்.
  • சமைத்த தக்காளிக்கு புரோஸ்டேட் புற்றுநோயை குணப்படுத்தும் ஆற்றல் அதிகம் உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
  • தக்காளியில் உள்ள விட்டமின் சி உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
  • இரண்டு தக்காளியை தோல் எடுத்து, விதைகளை நீக்கி சிறிது சிறிதாக அரிந்து அதை ஜீஸ் செய்து வெறும் வயிற்றில் காலையில் பருகி வந்தால் தோல் சம்பந்தமான நோய்கள் குணமாகும்.
  • கண்களுக்கு தேவையான விட்டமின் ஏ சத்து அதிக அளவு தக்காளி சாற்றில் உள்ளது. மேலும் இதிலுள்ள விட்டமின் கே இரத்தக் கசிவுகளை கட்டுப்படுத்த உதவுகிறது.
  • தக்காளியை தோல் மற்றும் விதையை நீக்கி சாறு தயாரித்து குடிப்பதால், அவை சிறுநீர் கிருமித்தொற்றை நீக்குகிறது.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்