மாதுளை தோள்: ஆண்களே இது உங்களுக்குதான்! டிரை பண்ணி பாருங்க

Report Print Jayapradha in அழகு

மாதுளையில் அதிக அளவு வைட்டமின்கள், புரதசத்துக்கள், நார்ச்சத்துக்கள் உள்ளன, மேலும் இதில் கலோரிகள் - 144, வைட்டமின் சி - 30%, வைட்டமின் கே - 36%,பொட்டாசியம் - 12%, நார்சத்து - 7 g,புரதம் - 3 g ஆகிய உடலுக்கு நன்மையை தரும் ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது.

மாதுளை பழத்தை போன்றே அதன் தோலில் எண்ணற்ற நன்மைகள் மறைந்துள்ளது. அத்தகைய மகத்துவம் வாய்ந்த மாதுளை தோலானது பெண்களை விட ஆண்களுக்கு ஏராளமான நன்மைகளை தருகின்றன.

மாதுளை தோலின் நன்மைகள்
  • சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றி புது செல்களை உற்பத்தி செய்யும் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் மாதுளை தோலில் அதிகம் உள்ளது. எனவே வாரத்திற்கு 2 முறை மாதுளை தோலை பொடி செய்து, அதனுடன் 1 டீஸ்பூன் ரோஸ் நீர், 1 டீஸ்பூன் பால் சேர்த்து நன்கு கலக்கி முகத்தில் தேய்த்து வந்தால் முகம் என்றும் இளமையாக இருக்கும்.
  • சில ஆண்களின் முகத்தில் உள்ள சொரசொரப்புகளை போக்க மாதுளை உதவுகின்றது. இதற்கு மாதுளை தோலை பொடி செய்து தேன் அதனுடன் எலுமிச்சை சாறு மற்றும் பால் சேர்த்து முகத்தில் மசாஜ் செய்து வந்தால் நீங்கும்.
  • எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் சிறிதளவு பொடி செய்த மாதுளை தோல்,1 டீஸ்பூன் தேன், சிறிது எலுமிச்சை சாறு, ரோஸ் நீர், பொடி செய்த ஆரஞ்ஜ் தோல் ஆகியவற்றை ஒன்று சேர்த்து நன்றாக கலக்கி முகத்தில் தடவுங்கள். பின் வெதுவெதுப்பான நீரில் முகத்தில் கழுவினால் எண்ணெய் பசை நீங்கும்.
  • ஆண்கள் அடிக்கடி வெளியில் செல்வதால் அவர்களுக்கு முகத்தில் வறட்சி ஏற்பட்டு சருமம் மிகவும் வறண்டு காணப்படும். இதனை சரி செய்ய . வாரத்திற்கு 2 முறை பொடி செய்த மாதுளை தோல்,1 டீஸ்பூன் யோகர்ட், 1 டீஸ்பூன் தேன்,சிறிது எலுமிச்சை சாறு, 1 டீஸ்பூன் பால், 1 டீஸ்பூன் தக்காளி சாறு ஆகியவற்றை நன்கு கலந்து முகத்தில் மசாஜ் செய்யவும்.
  • முக பருக்கள் நீங்க வாரத்திற்கு 2 முறை 1 டீஸ்பூன் யோகர்ட், 1 டீஸ்பூன் தேன், பொடி செய்த மாதுளை தோல், ரோஸ் நீர் போன்றவற்றை நன்றாக கலக்கவும். பின் முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் அலசினால் முக பருக்கள் நீங்கும்.
  • முகத்தின் அழகை கெடுப்பதில் கரும்புள்ளிகளை மறைய செய்ய பொடி செய்த மாதுளை தோல், 1 டீஸ்பூன் யோகர்ட், 1 டீஸ்பூன் தேன், 1 டீஸ்பூன் அவகடோ எண்ணெய் ஆகியவற்றை ஒன்று சேர்த்து முகத்தில் பூசி மசாஜ் செய்யவும். இது சருமத்தில் உள்ள கரும்புள்ளிகளை அகற்றும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்