கனவுகன்னி நயன்தாராவின் இளமைக்கான ரகசியம் இதுதான்..!

Report Print Jayapradha in அழகு

வழக்கமான கதாநாயகிகளுக்கு மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து லேடி சூப்பர்ஸ்டாராக உயர்ந்தவர் நயன்தாரா.

இந்த வயதிலும் இவ்வளவு அழகுடன் ஜொலிஜொலிக்க காரணம் என்ன தெரியுமா?

என்றும் இளமையாக இருக்க

எப்போதும் அதிக அளவு தண்ணீர் குடித்து கொண்டே இருப்பது மற்றும் அதிக பழ ஜுஸ்களை அருந்துவதினால் பழங்களில் உள்ள இயற்கையான சத்துக்கள் அவர்களின் உடலை அழகாக என்றும் இளமையுடன் பராமரிக்க உதவுகின்றதாம்.

கூந்தல் அழகிற்கு

முடிக்கு தேவையான அளவு எண்ணெய் இருந்தாலே மிகவும் மென்மையாகவும்,போஷாக்காகவும் இருக்கும் என்பதால் தினமும் அவர் முடிக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பாராம்.

முகம் பொலிவுடன் இருக்க

அவர் முகத்தை எப்போதும் சுத்தமாகவும், ஈரப்பத்தவுடனே வைத்திருக்க அதிகபட்சம் பிரௌன் டோன் மேக் அப்பையே போடுவராம். அத்துடன் மேலும் அழகை மேம்படுத்த ஆயர்வேத பொருட்களையே பயன்படுத்துவாராம்.

அழகான புன்னகைக்கு

எத்தனை கவலைகள் வந்தாலும் அதை நினைத்து கவலை கொள்ளாமல் என்றும் அழகான சிரிப்புடனே இருப்பாராம். இதுவே இவரின் அழகான புன்னகைக்கு காரணம்.

உடல் ஆரோக்கியம்

நல்ல தூக்கம் என்பது தினமும் 8 மணி நேரம் தவறாமல் தூங்குவதே. இவரும் தினமும் ஆழமான 8 மணி நேர தூக்கத்தையே கடைபிடித்து கொள்வாராம்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்