பெண்களின் அழகுக்கு இது மட்டும் போதுமே!

Report Print Jayapradha in அழகு

நமது வீட்டில் அன்றாடம் பயன்படுத்தும் புளியை கொண்டு முகத்திற்கு அழகூட்டலாம் என்று உங்களுக்கு தெரியுமா?

முகத்திற்கு பொலிவையும், புத்துணர்ச்சியையும் தருகிறது புளி, மேலும் முகத்தில் ஏற்படும் வடுக்கள், தோல் திட்டுக்களால் அவதிப்படுபவர்களுக்கு புளி சிறந்த பலனை கொடுக்கும்.

சருமத்திற்கு அழகு சேர்க்கும் புளியின் நன்மைகள்
  • முகம் பளபளக்க புளிச்சாறுடன் சிறிதளவு எலுமிச்சையும் தேனும் கலந்து முகத்தில் தடவி வர வேண்டும். மேலும் புளியில் உள்ள ஆல்பா ஹைட்ராக்ஸில் ஆசிட் சருமத்துறையில் தங்கியுள்ள அழுக்குகளை நீக்கும் திறன் கொண்டது.
  • தலைமுடி அதிகம் உதிர்ந்தால் கெட்டியான புளிச்சாற்றைக் கொண்டு தலைக்கு பேக் போட்டு அரைமணி நேரம் கழித்து ஷாம்பு கொண்டு தலையை அலசினால் முடி உதிர்தலும் குறையும்.
  • தண்ணீரில் புளியை சிறிது நேரம் ஊறவைத்து அந்த தண்ணீரை கொண்டு முகத்தை கழுவி வந்தால் முகம் மிகவும் பொலிவு பெறும்.
  • வாரம் இரண்டு முறை புளியை சிறிது அரைத்து, அதனுடன் பால் சேர்த்து குழைத்து முகத்தில் தடவி உலர்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவி வந்தால் முகம் பளிச்சென்று காட்சி தரும். மேலும் முகத்தில் ஏற்படும் வடுக்களும் முழுமையாக மறைய தொடங்கும்.
  • புளியுடன் பால் கலந்து மென்மையான துணியால் முகத்தை தேய்த்து பின்பு சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வந்தால் முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி முகத்திற்கு பளிச்சென்ற தோற்றத்தை தரும்.
  • குளிர் மற்றும் கோடை காலங்களில் புளியை ரோஸ் வாட்டரில் கலந்து ஸ்பிரேயாகவும் பயன்படுத்தி வந்தால் சரும வறட்சியை போக்கி சருமத்திற்கு புத்துணர்ச்சி தரும்.
  • புளி, பால், மஞ்சள் ஆகிய மூன்றையும் சேர்த்து குழைத்து கண்களுக்கு அடியில் படரும் கருவளையங்களை தடவி மசாஜ் செய்யது 10 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த பாலை கொண்டு கண்களை கழுவிவர விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்