முகத்தில் கருமையா? இதோ உங்களுக்கான டிப்ஸ்

Report Print Jayapradha in அழகு

ஆட்டா என்று அழைக்கப்படும் கோதுமையில் ஏராளமான ஊட்டச்சத்துகளும் விட்டமின்களும் அடங்கி இருப்பதால் அனைவரும் இதை உணவில் சேர்த்து கொள்கின்றனர்

இத்தகைய கோதுமை மாவு உடலுக்கு மட்டுமல்ல சருமத்திற்கும் மிகவும் நல்லது. சருமத்தை பொலிவாக வைக்க கோதுமை மாவின் சில பேஸ் பேக்குகளை பற்றி பார்ப்போம்.

கோதுமை மாவை பயன்படுத்தும் முறை

  • தினமும் இரண்டு முறை 2 கப் கோதுமை மாவு மற்றும் 1 கப் தண்ணீர் சேர்த்து நன்றாக குலைத்து பின்பு அதை முகத்தில் பேஸ்ட்டை போல் தடவி 10 நிமிடங்கள் அப்படியே வைத்து இருந்து பிறகு குளிர்ந்த நீரில் கழுவினால் சருமம் கருத்து போகமல் இருக்கும்.
  • தினமும் பால் மற்றும் கோதுமை மாவை நன்றாக கலந்து பேஸ்ட்டாக்கி அதை முகத்தில் தடவி 10 நிமிடங்கள் கழித்து சதாரண நீரில் கழுவினால் பொலிவான சருமத்தை பெறலாம்.
  • எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் வாரத்திற்கு இரண்டு முறை கோதுமை மாவு, பால் மற்றும் ரோஸ் வாட்டர் மூன்றையும் சேர்த்து நன்றாக கலந்து முகத்தில் பேக் போட்டு 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி வந்தால் முகத்தில் உள்ள எண்ணெய் பசை நீங்கும்.
  • பட்டு போன்ற சருமம் பெற வெதுவெதுபான நீரில் துருவிய ஆரஞ்சு தோலை தண்ணீரில் போட்டு சில ரோஜா இதழ்களையும் அதில் சேர்த்து சில நிமிடங்கள் கொதிக்க விட்டு பிறகு பாலை மிதமான சூட்டில் காய்ச்சி அதில் மேற்கூறிய மூன்று கலவையை சேர்த்து பின்பு கோதுமை மாவை சேர்த்து நன்றாக கலக்கி இந்த கலவையை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து பிறகு சாதாரண நீரில் கழுவி துடைக்க வேண்டும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்