முகசுருக்கங்கள் தடுக்கும் மாம்பழம்: இப்படி யூஸ் பண்ணி பாருங்க

Report Print Kavitha in அழகு

முகத்தின் இளமையை மறைப்பதே இந்த சுருக்கங்கள் தான். இது பலரின் முகத்தின் அழகை கெடுத்து வருகிறது.

இதற்கு நாம் பல்வேறு வழிகளில் முயற்சி செய்தும் பயனில்லை. இதற்கு இயற்கை தீர்வே சிறந்த வழி முறை ஆகும்.

முக அழகை மேம்படுத்தவும், பராமரிக்கவும் ஒரு சில முக்கிய பழங்கள் உதவும். அந்த வகையில் இந்த மாம்பழம் முக்கிய இடத்தில் உள்ளது.

மாம்பழத்தில் உள்ள சத்துக்களே முக அழகை பாதுகாக்கிறது

மாம்பழத்தை வைத்து முகத்தில் உள்ள சுருக்கங்கள் மறைய இந்த குறிப்பை பயன்படுத்தி பாருங்கள்.

தேவையானவை

  • முட்டை வெள்ளை கரு 1
  • மாம்பழ சாறு 2 ஸ்பூன்

செய்முறை

முதலில் முட்டையை உடைத்து, அதன் வெள்ளை கருவை தனியாக எடுத்து கொள்ளவும். பிறகு இதனை நன்கு அடித்து கொள்ளவும்.

பின் அவற்றுடன் மாம்பழ சாற்றையும் சேர்க்க வேண்டும்.

இந்த கலவையை முகத்தில் பூசி மசாஜ் செய்து, வறண்ட பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இவ்வாறு செய்து வந்தால் முகச்சுருக்கங்கள் பறந்து விடும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்