முடி உதிர்வை தடுக்கும் இஞ்சி... எப்படி பயன்படுத்தலாம்?

Report Print Kavitha in அழகு

தற்போது உள்ள பெண்களுக்கு முடி உதிர்வு பெரும் தொல்லையாகவே உள்ளது.

இதற்கு நாம் கடைகளில் விற்கப்படும் கண்ட கண்ட எண்ணெய்கள் செயற்கை மருந்துகள் உபயோகிப்பதுண்டு.

இதற்கு நம் சமையல் அறை பொருட்களில் ஒன்றான இஞ்சியை வைத்து முடி உதிர்வை தடுக்க முடியும்.

இஞ்சியின் வேரில் முடியின் வலிமை, ஆரோக்கியம் மற்றும் மென்மையை அதிகரிக்கும் சத்துக்களான மக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் வைட்டமின்கள் போன்றவை ஏராளமாக நிறைந்துள்ளது.

இஞ்சியில் ஃபேட்டி ஆசிட்டுகள் அதிகம் நிறைந்துள்ளது. இது முடி உதிர்வதைக் குறைத்து, தலைமுடி மெலிவதைத் தடுக்கும்.

இஞ்சி முடியின் ஆரோக்கியம் மற்றும் வலிமையை அதிகரிப்பதோடு, முடி உதிரும் பிரச்சனை இருந்தாலும், அதனை சரிசெய்து, மயிர்கால்களை வலிமையாக்கும். தற்போது இஞ்சியை பயன்படுத்தி முடி உதிர்வை எப்படி தடுப்பது என்பதை பார்ப்போம்.

  • 2 டேபிள் ஸ்பூன் இஞ்சி சாற்றினை 1 டேபிள் ஸ்பூன் ஆலிவ் எண்ணெயுடன் சேர்த்து கலந்து, இரவில் படுக்கும் முன் ஸ்கால்ப்பில் தடவி இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் காலையில் அலச வேண்டும். இப்படி செய்து வந்தால் பொடுகுத் தொல்லை அகலும்.
  • இஞ்சியைக் கொண்டு தலைமுடியைப் பராமரித்தால், தலையில் இரத்த ஓட்டம் அதிகரித்து, மயிர்கால்களுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து, முடியின் வளர்ச்சி அதிகரிக்கும்.
  • இஞ்சி சாற்றினை ரோஸ் வாட்டருடன் சேர்த்து கலந்து, ஸ்கால்ப்பில் தடவி ஊற வைத்து அலசினால், பொடுகுத் தொல்லையில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.
  • இஞ்சி சாற்றினை எலுமிச்சை சாற்றுடன் கலந்து, அதனை தலையில் தடவி, 5 நிமிடம் ஊற வைத்து உடனே அலசி விட வேண்டும். இல்லாவிட்டால், அவை ஸ்கால்ப்பை பெரிதும் பாதித்துவிடும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers