வெள்ளை முடி இளம் வயதிலே உங்களை ஆட்டி படைக்கிறதா? இதோ எளிய தீர்வு

Report Print Kavitha in அழகு

பொதுவாக சிலருக்கு இளம் வயதிலே இளநரை வர ஆரம்பித்துவிடுகின்றது. வெள்ளை முடிகளை தற்காலிகமாக கருமையாக்க "டை" போன்ற பலவித வேதி பொருட்களை நாம் பயன்படுத்துவோம்.

இருப்பினும் இது நமக்கு நிரந்த தீர்வை தர முடியாது. இவை நமது முடியை குறைந்த காலத்திற்கு மட்டும் வெள்ளையாக காட்டி விட்டு, அதன் பின்னர் மீண்டும் வெள்ளையாகவே மாற்றி விடும்.

இதற்கு நம் முன்னோர்கள் கையாண்டு வந்த இயற்கை முறை மிகவும் சிறந்ததாகவும் ஆரோக்கியமானதாகும் கருதப்படுகின்றது.

அந்தவகையில் கொய்யா இலை நரை முடிக்கு தீர்வை தருகின்றது. தற்போது அது எப்படி என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

  • கொய்யா இலை 5
  • கறிவேப்பில்லை இலை 20
  • நெல்லி 1
  • தேங்காய் எண்ணெய் 200 மி.லி

செய்முறை

முதலில் தேங்காய் எண்ணெய்யை வாணலில் ஊற்றி அதில் கருவேப்பிலை, கொய்யா இலை, நறுக்கிய நெல்லிக்காய் முதலியவற்றை சேர்க்கவும்.

மிதமான சூட்டில் இவை முழுவதுமாக வறுபடும் வரை வதக்கி கொண்டு, அடுப்பை அணைத்து விடவும்.

இந்த கலவை குளிர்ந்த பிறகு இதனை வடிகட்டி வாரத்திற்கு 1 முறை இந்த எண்ணெய்யை தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் வெள்ளை முடிகள் காணாமல் போய் விடும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...