இழந்த அழகை ஒரே இரவில் மீட்க வேண்டும் ? இந்த ஒன்று மட்டுமே போதும்

Report Print Kavitha in அழகு

இன்றைய கால கட்டத்தில் சில பெண்களுக்கு 25 வயதை தாண்டியவுடனே முகம் வறண்டு போய் கழையிழந்து காணப்படும்.

இதற்காக அடிக்கடி பார்லர்களுக்கு பணத்தை அதிகமாக செலவழித்து கண்ட கண்ட பேஷியல்,கிளின் அப் போன்றவை செய்வது வழக்கம்.

நமது முன்னோர்கள் யாரும் பார்லர்களுக்கு செல்லவில்லை ஆனாலும் கூட அவர்கள் பல ஆண்டுகள் இளைமையுடன் இருந்தார்கள். அதற்கு முக்கிய காரணம் இயற்கை தான்.

இயற்கை நமக்கு பல வழிகளில் உதவு புரிகின்றது. அந்தவகையில் இயற்கையாக கிடைக்கும் பொருட்களில் ஒன்று தான் மஞ்சள்.

இது மஞ்சள் இயற்கையாகவே பாக்டீரியாக்கள், தொற்றுக்கள், கேன்சர் செல்கள் போன்றவற்றை எதிர்க்கும் தன்மை கொண்டது. எனவே தான் மஞ்சள் நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் ஒரு சிறந்த மருத்துவ பொருளாக உள்ளது.

தற்போது மஞ்சளும் கடலை மாவும் கொண்டு முகத்தை எப்படி இளமையாக்குவது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

  • கடலை மாவு - 2 டிஸ்பூன்
  • மஞ்சள் - 1 டிஸ்பூன்
  • பால் - 3 டேபிள் ஸ்பூன்
  • தேன் - சிறிதளவு

செய்முறை

கடலை மாவு, தேன், பால், மஞ்சள் ஆகிய பொருட்களை ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும். தடிமனான அடுக்காக இதனை முகத்தில் அப்ளை செய்ய வேண்டும்.

இதனை அப்படியே 20 நிமிடங்கள் விட்டுவிட வேண்டும். பின்னர் இதனை கழுவி விட்டு, உங்களது தினசரி மாய்சுரைசரை போட்டுக் கொள்ளுங்கள்.

இந்த மாஸ்க்கை போட இரவு நேரம் மிகச்சிறந்ததாக இருக்கும். உங்களுக்கு இது பேசியல் செய்தது போன்ற உணர்வை கொடுக்கும்.

இதனை வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறைகள் செய்து வந்தால் சுத்தமான அழகான சருமத்தை பெறலாம்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers