உங்க உடம்புல இப்படி தழும்பு இருக்கா? ஒரு ஸ்பூன் காபி பொடியை இப்படி பயன்படுத்துங்க

Report Print Kavitha in அழகு

பொதுவாக ஒரு சிலருக்கு இடுப்பு, தொடைகள் அல்லது அடிவயிறு போன்ற இடங்களில் தழும்புகள் போன்று தோன்றும்.

திடீரென எடை மாற்றம், ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் மற்றும் மோசமான பழக்கம் ஆகியவற்றால் அவை ஏற்படக்கூடும்

இதற்கு காபி மற்றும் தேங்காய் எண்ணெயால் செய்யப்பட்ட தழும்பு வடுகளை அடியோடு அழிக்க உதவு புரிகின்றது.

தற்போது இதனை கொண்டு எப்படி தழும்புகளை போக்குவது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

  • 5 தேக்கரண்டி அரைக்கப்பட்ட காபி கொட்டைகள் (75 கிராம்)
  • 3 தேக்கரண்டி ஆர்கானிக் தேங்காய் எண்ணெய் (45 கிராம்)
  • 1 தேக்கரண்டி அலோவேரா (கற்றாழை) ஜெல் (15 கிராம்)
  • 2 தேக்கரண்டி மினரல் வாட்டர் (30 மிலி)

செய்முறை

ஒரு கண்ணாடி ஜாடிக்குள் அரைத்த காபித்தூள், தேங்காய் எண்ணெய், அலோ வேரா ஜெல் மற்றும் தண்ணீர் சேர்த்து கலக்குங்கள்.

ஒரு மென்மையான பேஸ்ட் கிடைக்கும் வரை ஒரு சில நொடிகள் கலவையை பெற ஒரு மர ஸ்பூன் கொண்டு நன்கு கலக்குங்கள்.

வடுக்கள் மற்றும் தழும்புகள் உள்ள பகுதிகளில் பாதிப்பு அளவை பொறுத்து இந்த களிம்பை நன்கு தேய்க்கவும்.

ஐந்து நிமிடங்கள் மென்மையான மசாஜ் செய்து, பின்னர் அதை மற்றொரு 20 நிமிடங்களுக்கு விட்டு விடுங்கள்.

பின் குளிர்ந்த நீரில் கழுவுங்கள். இதை வாரத்துக்கு 2 முறை அல்லது நேரம் கிடைத்தால் தினமும் கூட செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers