வெள்ளை முடிகளை தடுக்க ஸ்ட்ராபெர்ரி பழத்தை இப்படி யூஸ் பண்ணுங்க

Report Print Kavitha in அழகு

இன்றைய சந்ததியினருக்கு பெரும் தலைவலியாக உள்ளது தான் தலைமுடி பிரச்சினை

வெள்ளை முடி, முடி கொட்டுதல், முடியின் அடர்த்தி குறைதல், வழுக்கை இப்படி பல பிரச்சினைகள் தலை முடியில் உருவாகிறது.

பெரும்பாலும் சிலருக்கு இளநரை தோன்றி தலை முடியின் அழகையே கெடுத்துவிடுகின்றது.

இதற்காக பலர் கண்ட கண்ட டைகளை வாங்கி தலைக்கு உபயோப்பதுண்டு. இது தற்காலிகமாக தான் நீடிக்கும் பிறகு பழைய நிறத்திற்கு மாறி விடுவதனால் நிரந்த தீர்வை தர முடியாது.

இதற்கு நாம் இயற்கையாக கிடைக்கும் பொருட்களை கொண்டு நரை முடியினை போக்க முடியும். தற்போது அது என்ன என்பதை பார்ப்போம்.

தேவையானவை

  • கற்றாழை சாறு 2 ஸ்பூன்
  • ஸ்ட்ராவ்பெர்ரி 1
  • தேங்காய் எண்ணெய் 1 ஸ்பூன்

தயாரிப்பு முறை

முதலில் கற்றாழை ஜெல்லை நன்றாக அரைத்து அதன் சாற்றை தனியாக எடுத்து கொள்ளவும்.

அதன் பின் இவற்றுடன் ஸ்ட்ராவ்பெர்ரி சாற்றையும் சேர்த்து கொள்ளவும்.

இறுதியாக தேங்காய் எண்ணெய் சேர்த்து தலைக்கு தடவி, 15 நிமிட கழித்து தலைக்கு குளிக்கலாம்.

இவ்வாறு செய்து வந்தால் நரைகளில் இருந்து தப்பிக்கலாம். அதோடு முடி பளப்பளப்பாகவும் மிருதுவாகவும் காணப்படும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers