முகப்பருக்களை தடுக்க வேண்டுமா? வாரத்திற்கு 2 முதல் 3 முறை இதை செய்திடுங்க

Report Print Kavitha in அழகு

பொதுவாக எல்லோரும் சந்திக்கும் பிரச்சினை தான் முகப்பரு.

இது பொதுவாக எண்ணெய் சருமம் உள்ளவர்களுக்கு அடிக்கடி வரும். இதற்கு கண்ட கண்ட கிறீம்களை மட்டுமே உபயோகிப்பதுண்டு.

அதற்கு வீட்டில் கிடைக்கும் பொருட்களை கொண்டே எளிதில் சரி செய்ய முடியும். தற்போது அவை என்ன என்பதை பார்ப்போம்.

தேவையானவை

  • கருப்பு திராட்சை 5
  • தேன் 2 ஸ்பூன்
  • பன்னீர் 1 ஸ்பூன்

தயாரிப்பு முறை

திரட்சையை நன்றாக மசித்து கொள்ளவும். அடுத்து இதனுடன் தேன் மற்றும் பன்னீர் கலந்து முகத்தில் தடவி மசாஜ் செய்யவும்.

அதன் பின் 15 நிமிடம் சென்று முகத்தை கழுவி விடலாம்.

இந்த குறிப்பு முகத்தில் உள்ள பருக்கள் மற்றும் வறட்சியை போக்கி விடும். மறக்காமல் தொடர்ந்து இதை செய்து வந்தால் பலன் அதிகம்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers