பத்தே நாட்களில் சருமத்தை வெள்ளையாக்க வேண்டுமா? இந்த ஒரு ஃபேஸ் பேக் போதுமே

Report Print Kavitha in அழகு

இன்றைய பெண்கள் கெமிக்கல் க்ரீம்கள்,செயற்கை ஊசிகள்,மருந்துகள் போன்றவற்றை உபயோகித்து அழகை மெருகூட்டி கொள்வதுண்டு.

இருப்பினும் சருமத்தின் பொலிவு இது தற்காலிகமாக தான் வைத்திருக்கும். அதுமட்டுமின்றி அந்த க்ரீம்கள் அல்லது ஃபேஸ் மாஸ்க்குகளைப் பயன்படுத்துவதை நிறுத்தினால், உடனே உங்கள் முகம் பழையபடி பொலிவிழந்து காணப்படும்.

அதற்கு சருமத்தை இயற்கை முறையில் பொலிவு பெற செய்யலாம். தினமும் ஃபேஸ் பேக்கை போட்டு வந்தால், சருமத்திற்கு தேவையான சத்துக்கள் கிடைப்பதோடு, சருமத்தில் உள்ள கருமையும் அகன்று, முகம் பளிச்சென்று மின்னும்.

தற்போது அந்த அற்புத ஃபேஸ் பேக்கை எப்படி போடுவது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்
  • ரோஜாப்பூ இதழ்கள் - 7
  • ரோஸ்வாட்டர் - 2 டேபிள் ஸ்பூன்
  • தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
  • தேன் - 1 டேபிள் ஸ்பூன்
செய்யும் முறை

முதலில் ரோஜாப்பூ இதழ்களை ரோஸ் வாட்டரில் 5 நிமிடம் ஊற வைத்து கையால் மசித்து கொள்ளுங்கள்.

பின் அதில் தேன், தயிர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

இந்த ஃபேஸ் மாஸ்க்கில் தேன் மற்றும் தயிர் சேர்க்கப்பட்டுள்ளதால், இந்த மாஸ்க்கை தினமும் முகத்திற்கு போடுவதால், தயிரில் உள்ள ப்ளீச்சிங் தன்மையினால் சருமத்தில் உள்ள கருமை நீங்கி, சருமம் வெள்ளையாகும்.

இந்த ஃபேஸ் மாஸ்க் சரும சுருக்கங்கள், முதுமைக் கோடுகள், முதுமைப் புள்ளிகள் போன்ற அனைத்தையும் நீக்கும் திறன் கொண்டது. இதை 10 நாட்கள் தொடர்ந்து பின்பற்றுவதன் மூலம் நன்கு காண முடியும்.

இந்த ஃபேஸ் பேக்கில் ஆன்டி-பாக்டீரியல் தன்மை உள்ளது. எனவே இந்த ஃபேஸ் போக்கை போடுவதன் மூலம் பிம்பிள் நீங்குவதோடு, சருமத்தில் உள்ள இறந்த செல்கள் முற்றிலும் நீங்கி, பொலிவிழந்த சருமம் பொலிவோடு காணப்படும்

இந்த ஃபேஸ் மாஸ்க் போடுவதன் மூலம், சருமத்தின் மென்மைத்தன்மை அதிகரிக்கும்.

மேலும் இது சருமத்திற்கு நீர்ச்சத்தை வழங்கி, சருமத்தை வறட்சியின்றி பொலிவோடு வைத்துக் கொள்ளும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்